232 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | (பி - ம்.) 1ஞெரோவென்பது 2ஞெரோவென 3நப்பின்னை, நந்நாகர், நக்குடகம் 4கொள்ளெனச்செய்யும் | (2) | | (421) | பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம் இசைநிறை யெனவா றேகா ரம்மே. | எ - ன், வேற்றுமையுருபுமுதலாயின நான்கும் மேலே சொல்லப் பட்டன; தத்தம்பொருளனவும் இசைநிறைப்பனவும் அசைநிலையும் குறிப்புமாவனவுணர்த்துவான் றொடங்கினார் அவற்றுள், இஃது ஏகார விடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒருகுழுவின் ஒன்றைப்பிரித்தற்கண்ணும் வினாதற்கண்ணும் பலவற்றை அடுக்கி எண்ணற்கண்ணும் ஈற்றிலே பொருள் வேண்டா விடத்தும் ஒருபொருளைத் துணியுமிடத்தும் ஓசைநிறைக்க வேண்டுமிடத்தும் நிற்றலின், அவ்வப்பெயரான் ஆறு கூற்றதாம் ஏகாரம் எ - று.
வ - று. அவனேகொண்டானென்பது பிரிநிலை; நீயேகொண்டா யென்பது வினா; நிலனே நீரே தீயே வளியே என்பது எண்; “கடல் போற் றோன்றல காடிறந் தோரே” (அகநா. 1) என்பது ஈற்றசை; அவனே கொண்டான், “உண்டேமறுமை” என்பன தேற்றம்; “1ஏயே யிவ ளொருத்தி பேடியோ வென்றார்” (சீவக. 652) என்பது இசைநிறை.
(பி - ம்.) 1 ஏஏ | (3) | | (422) | ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவேட் டோவே. | எ - ன், ஓகார இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒரு சொல்லொழியவரும் ஒழியிசையும் வினாவும் ஒன்றைச் சிறப்பிப்பதும் அறிந்தபொருளை எதிர்மறுப்பதும் 1தெரிநிலையும் ஒரு பொருட்கழிவும் அசைநிலையும் பிரிநிலையுமென்னும் எட்டுப்பொருட்கூற்றதாம் ஓகாரம் எ - று.
வ - று. கொளலோ கொண்டானென்பது ஒழியிசை; கோடற்குத் தகுமாயினும் கொண்டுய்யப் போயினானல்லலென ஒரு சொல் ஒழிவுபட வந்தமையின். அவனோ அல்லனோவென்பது வினா. “ஓஒ பெரியன்” என்பது சிறப்பு. யானோகொண்டேனென்பது எதிர்மறை. நன்றோ அன்று, தீதோஅன்றென்பது தெரிநிலை; இடை நிகர்த்ததென்பது தெரித்தமையின். “நைதலொன்றி நல்லறஞ் 2செய்கின்றிலா, ரோஒ தமக்கோ ருறுதி யுணராரோ” என்பது கழிவு. “சார னாட நடுநாள், வாரல் வாழியோ வருந்துதும் யாமே” (குறுந். 69), “காணிய வம்மினோ 3கங்குலது நிலையே” என்பன அசைநிலை; “முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர், விதைக்குறு வட்டி போதொடு பொதுளப், பொழுதோ 4தான்வந் தன்றே” (குறுந். 155) என்பது பிரிநிலை. | |
|
|