(பி - ம்.) 1 (1) தெரிவு, (2) தெரிபும் 2 செய்கென்றா லோஒதமக்கோ ருறுதி யுணராரே 3 மாலையதுநிலையே 4 கான்வந்தன்றே | (4) | | (423) | வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரு மென்று மற்றே. | எ - ன், எனவெனவும் என்றெனவும் வரும் இடைச்சொற்களின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இந்த ஆறு பொருளிலும் எனவென்னும் இடைச்சொல் வரும்; என்றென்னு மிடைச்சொல்லும் இவ்வாறு பொருளிலும் வரும் எ - று.
வ - று. கொள்ளெனக்கொண்டான் எ - து வினை. “ஊரெனப்படுவ துறையூர்” எ - து பெயர்; “விண்ணென விசைத்தது” எ - து குறிப்பு; “ஒல்லென வொலித்தது” எ - து இசை; “கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென, உடல்சின வுருமென வூழித்தீயென” (சீவக. 973), “ஒன்றென இரண்டென மூன்றென நான்கென ஐந்தென ஆறென ஏழென எட்டெனத் தொண்டென (பரிபாடல், 3) எ - து எண்; “வெள்ளென விளர்த்தது” எ - து பண்பு.
இனி என்றென்பது வருமாறு : கொள்ளென்று கொண்டான்எ - து வினை; ஊரென்று சொல்லப்படுவது உறையூர் எ - து பெயர்; விண்ணென்று விசைத்தது எ - து குறிப்பு; ஒல்லென்றொலித்தது.
எ - து இசை; கடலென்று காற்றென்று கடுங்கட்கூற்றென்று எ - து எண்; வெள்ளென்று விளர்த்தது எ - து பண்பு. (வெள் - வெண்மையென்றறிக.) | (5) | | (424) | எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. | எ - ன், உம்மை இடைச்சொல்லினது இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்வெட்டுப் பொருளிலும் வரும் உம்மென்னு மிடைச்சொல் எ - று.
வ - று. கொற்றன் வருதற்குமுரியன் எ - து எதிர்மறை; வாரா னென்பதற்கு முரித்தாகலின், “குறவரு மருளுங் குன்றம்” (மலைபடு. 275) எ - து சிறப்பு. பத்தானும் எட்டானுங்கொடு எ - து ஐயம்; ஒன்று துணியாமையின். சாத்தனும் வந்தான் எ - து எச்சம்; அவனையேயன்றிப் பிறரையும் வரவுவிளக்கலின். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் எ - து முற்று. ஒன்று மிரண்டும், ஒருகழஞ்சும் இருகழஞ்சும், உழக்கும் ஆழாக்கும், ஒருகோலும் அரைக்கோலுமென்பன அளவை. சாத்தனும் கொற்றனுமென்பது எண். நன்றுமன்று தீதுமன்று எ - து தெரிநிலை; இடைநிகர்த்ததென்பதைத் தெரித்தமையின். நெடியனுமாயினான் எ - து ஆக்கம். | (6) | |
|
|