| 234 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (425) | முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும். | இதுவுமது.
(இ - ள்.) முற்றும்மை ஒரோவிடத்து எச்சவும்மைப்பொருட்டுமாம் எ - று.
வ - று. ‘பத்துங்கொடால்’ என்றால், ‘அனைத்தும் கொடால்’ என்றுமாம்; ‘அவற்றுட் சிலகொடு’ என்றுமாம். ‘எல்லாரும் 1வந்திலர்’ என்றால், ‘அனைவரும் வந்திலர்’ என்றுமாம்; ‘சிலர் வந்தார்’ என்றுமாம்.
(பி - ம்.) 1வாராரென்றால் அனைவரும் வாராரென்றுமாம் சிலர் வருவாரென்றுமாம். | (7) | | | (426) | செவ்வெ ணீற்றதா மெச்ச வும்மை. | இதுவுமது.
(இ - ள்.) செவ்வெணின்கண் எச்சவும்மை கொடுக்கின் ஈற்றிலே கொடுக்க எ - று.
வ - று. “அடகு புலால்பாகு பாளிதமு முண்ணான், கடல்போலுங் கல்வி யவன்” (தொல். இடை. சூ. 36, இளம். சே. ந.) எனவரும்; அடகும் புலாலும் பாகும் பாளிதமுமுண்ணானென்றறிக. | (8) | | | (427) | பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனாவெண் நான்குந் தொகைபெறு மும்மையென் 1றெனவொ | டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும்.
எ - ன், 2பெயரும் இடைச்சொல்லும் விராவுழி நிகழ்வதோர் விதி யுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பெயரிடத்துவருஞ் செவ்வெண்ணும் ஏகாரவெண்ணும் என்றாவெண்ணும் எனாவெண்ணும் ஆகியநான்கும் இறுதித் தொகைபெற்று நடக்கும்; உம்மையெண்ணும் என்றெனெண்ணும் எனவெனெண்ணும் ஒடுவெனெண்ணும் ஆகிய நான்கும் தொகைபெறாது நடக்கும் எ - று.
வ - று. சாத்தன் கொற்றன் இருவரும்வந்தார், சாத்தனே கொற்றனே தேவனே மூவரும் வந்தார், சாத்தனென்றா கொற்றனென்றா இருவரும் வந்தார், சாத்தனெனாக் கொற்றனெனா இருவரும் வந்தாரென முறையே நான்கெண்ணும் தொகை பெற்றவாறு காண்க.
இனி, நிலனும் நீரும் தீயும் நல்ல, சாத்தனென்று கொற்றனென்று தேவனென்று சொன்னவர் வந்திலர், ‘நிலனென நீரெனத் தீயென வளியென, 3வளவில் காய மெனவறி பூதம்’, “பொன்னொடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே” என முறையே நான்கும் தொகையின்றி வந்தவாறு காண்க.
உம்மையால், நிலனும் நீருமிரண்டும் வேண்டுமெனத் தொகை பெறலுமாமென்க.
(பி - ம்.) 1எனவொடு விந்நான்கு 2எண்பெயரும் 3அளவிலா காயமென வறிபூதம் | (9) | |
|
|