| | (428) | என்று மெனவு மொடுவு மொரோவழி நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும். |
எ - ன், இம்மூன்றெண்ணிற்கும் ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்றிடைச்சொல்லும் எண்ணின்கண் ஓரிடத்தே நின்றனவேனும் எண்ணும் பொருள்தொறும் பிரிந்துசெல்லும் எ - று.
வ - று. “வினைபகை யென்றிரண்டி னெச்சம்” (குறள். 674) என்ற வழி, என்றென்பது ஏனை வினையிடத்தும் செல்லும். “பகைபாவ மச்சம் பழியென நான்கும்” (குறள். 146) என்றவழி எனவென்பது ஏனை மூன்றிடத்துஞ்செல்லும். “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்” (குறள். 675) என்றவழி ஒடுவென்பது ஏனைநாலிடத்தும் செல்லும். |
(10) |
| | (429) | வினையொடு வரினுமெண் ணினைய வேற்பன. |
எ - ன், எண்வகையெண்கட்கும் ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வினையொடு கூடிவருமிடத்தும் எண்கள் மேற்சொன்ன வாறே தொகைபெற்றும் பெறாதும் வருவனவாம் எ - று.
‘ஏற்பன’ எனவே என்றும் எனவும் ஒடுவும் அருகியல்லது வாரா வெனக்கொள்க.
வ - று. அறுத்தும் குறைத்தும் சுகிர்ந்தும் வகிர்ந்துமிட்டாரென உம்மையெண் வினையொடுவந்தது. அறுத்தெனக் குறைத்தெனச் சுகிர்ந்தென வகிர்ந்தெனத் தந்தாரென எனவெண் வினையொடுவந்தது. “மண்டில மழுங்க மலைநிறங் கிளர, வண்டின 1மலர்பரந் தூத மிசையே, கண்டற் 2கானற் குருகின மொலிப்ப” (அகநா. 260) என வினைச்செவ்வெண் வந்தவாறு. சாத்தன்வந்தான், கொற்றன் வந்தான்; இருவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்ததென அது தொகைபெற்று வந்தவாறு காண்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
(பி - ம்.) 1மலர்ப்பைந்தாதூதமிசைய 2கானங் |
(11) |
| | (430) | விழைவே கால மொழியிசை தில்லே. |
எ - ன், தில்லென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்று பொருட்கண்ணும் வரும், தில்லென்னு மிடைச்சொல் எ - று.
வ - று. “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப், பெறுகதி லம்ம யானே” (குறுந். 14); பெறுவேனாகவென இது விழைவின் கண் வந்தது. “பெற்றாங் கறிகதி லம்மவிவ் வூரே” (குறுந். 14.) இது பெற்றபின் அறிவதாக எனக் காலத்தின்கண் வந்தது. “வருகதி லம்ம வெஞ் சேரி சேர” (அகநா. 276); இது வந்தால், இன்னதொன்று செய்வே னென்னும் சொல்லொழிய வந்தமையின், ஒழியிசைக்கண் வந்தது. |
(12) |