238 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (438) | மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். | எ - ன், மாவென்பது இப்பொருட்கண் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மாவென்னுமிடைச்சொல் வியங்கோட்கண் அசைச்சொல்லாய்வரும் எ-று.
வ - று. “ 1மாயக் கடவுட் குயர்கமா வலனே”, “உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யானே” (தொல். இடை. 25, இள. சே. ந. மேற்.) என வியங்கோட்கண் அசைச்சொல்லாய் வந்தவாறு.
(பி - ம்.) 1 காலக் கடவுட்கு | (20) | | (439) | மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவீ யாழமுன் னிலையசை. | எ - ன், மியாமுதலிய இடைச்சொற்களின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மியாவும் இகவும் மோவும் மதியும் அத்தையும் இத்தையும் வாழியவும் மாளவும் ஈயும் யாழவுமென்னும் இப்பத்திடைச்சொல்லும் முன்னிலைக்கண் அசைநிலையாய்வரும்எ - று.
வ - று. “சிலையன் செழுந்தழையன் சென்மியா வென்று, மலையகலான் வாடி வரும்” (யா. வி.) எ - ம், “தண்டுறை 1யூரயாங் காண்டிக வெனவே” எ - ம், “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறுந். 2) எ - ம், “சென்மதி பெரும” எ - ம், “மெல்லியற் குறுமக ளுள்ளிச், செல்வ லத்தை” (புறநா. 196) எ - ம், “வேய்நரல் விடரக நீயொன்று பாடித்தை” (கலி. 40) எ - ம், “காணியவா வாழிய மலைச்சாரல்” (இ. வி. சூ. 276, உரை) எ - ம், “சிறிது தவிர்ந்தீக மாளநின் 2பரிசில ருய்ம்மார்” (இ. வி. சூ. 276, உரை) எ - ம், “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகநா. 46) எ - ம், “நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின், கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே” (கலி. 7) எ - ம் முறையே காண்க.
(பி - ம்.) 1 ஊரன்காண்டிக 2 பரிசில ருயிர்மார் | (21) | | (440) | யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின்குரை யோரும் போலு மிருந்திட் டன்றாந் 1தாந்தான் கின்றுநின் றசைமொழி. | எ - ன், யாமுதலிய அசைநிலையிடைச்சொற்களின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருபதிடைச்சொல்லும் அசைநிலைமொழிகளாம்எ - று.
வ - று. “வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே, தோழியா சுவாகதம் போது கீங்கென” (சீவக 1021) எ - ம், “அறநிழ லெனக்கொண்டா யாய்குடை யக்குடைப், புறநிழற்கீழ்ப் பட்டாளோ | |
|
|