4. - இடைச்சொல்லியல்

239

   
விவளிவட் காண்டிகா” (கலி. 99) எ - ம், “மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி
நின்றாயோ, ராயனை யல்லை பிறவோ வமரருள், ஞாயிற்றுப் புத்தேண் மகன்” (கலி.
108) எ - ம், “பிறத்தல் பிணிப்படன் மூத்த லிறத்தல், திறப்பட்ட நான்கினுந் தீர்விதற்
கென்னென, இறத்தலு மாங்கொ லெனக்குமென் றெண்ணிப், பிறக்கதனுட் செல்லான்
பெருந்தவப் பட்டான்” எ - ம், “தூதுவர் விடாராய்த் துறப்பார்கொ னோதக, இருங்குயி
லாலுமரோ” (கலி. 33) எ - ம், “எரியினன்ன 2செந்தலை யன்றில், பிரியின் வாழா
தென்போ 3மன்ற” எ - ம், “விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவெங் கண்ணே” (நற். 178)
எ - ம், “கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே” (ஐங்குறு. 121 - 8) எ - ம், “சாந்த
ஞெகிழி காட்டி, ஈங்கா கியவா லென்றுசின்” (நற். 55) எ - ம், “அளிதோ தானேயது
பெறலருங் குரைத்தே” (புறநா. 5) எ - ம், “அஞ்சுவதோரு மறனே யொருவனை,
வஞ்சிப்ப தோரு மவா” (குறள். 366) எ - ம், “வடுவென்ற கண்ணாய் வருந்தினை
போலும்” எ - ம், “ஓராற்றா லென் கண் ணிமைபொருந்த வந்நிலையே, கூரார்வேன்
மாறனென் கைப்பற்ற - வோரா, நனவென் றெழுந்திருந்தே னல்வினையொன் றில்லேன்,
கனவு மிழந்தொழிந்த வாறு” (முத்.), “அஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியா, னெஞ்சம்
பிளந்திட்டு நேரார் நடுவட்டன், வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்” (கலி. 101),
“தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” (சீவக. 1)எ - ம், “பணியுமா மென்றும்
பெருமை சிறுமை, அணியுமாந் தன்னை வியந்து” (குறள். 978) எ - ம், “தகைமிகு
4குழைதருந்தாந் தாவில் சீர்த் தம்மடிக்கண், முகைமிகு மலர்க்கண்ணி” எ - ம்,
“சாந்துய ரெவ்வ முழந்துறு தண்புனல், நீந்தியோர் மாண்பினை தோன்றலி னீதான்”
எ - ம், “யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட் டிருக்கின் றேனே” (சீவக. 1487)
எ - ம், “அழலடைந்த மன்றத் 5தலந்தயரா நின்றார், நிழலடைந்தே நின்னை யென்
றேத்திக் - கழலடைய” (பு. வெ. 3 : 7), ஊரினின்று வந்தார் எ - ம் முறையே
வந்தவாறு காண்க.

     (பி - ம்.) 1தந்தான் 2செழுந்தலை 3தெய்ய 4குழைதந்தார் தாவில்சீர்த்
தம்மடிக்கண் 5அரந்தையராய்

(22)

நான்காவது இடைச்சொல்லியல் முற்றிற்று.