24

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   

மெல்லினம்

     

(68)

மெல்லினம் ஙஞண நமனவென வாறே.

     இதுவுமது.

     (இ - ள்.) ங ஞ ண ந ம ன வென்னும் ஆறெழுத்தும் மெல்லின மென்னும்
குறியவாம் எ - று.
 

இடையினம்

     

(69)

இடையினம் யரல வழளவென வாறே.
     இதுவுமது.

     (இ - ள்.) ய ர ல வ ழ ள வென்னும் ஆறெழுத்தும் இடையினமென்னும்
குறியவாம் எ-று.

     இம்மூவினமும் அன்னவாமாறு உச்சரித்துச் செவிகருவியாக 1ஓர்ந்து கொள்க.

     பெயர் முற்றும்.

     (பி - ம்.) 1 ஓர்ந்துணர்க

(15)

இனவெழுத்து

     

(70)

ஐஒள இஉச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்1வரு முறையே.
     எ - ன், நிறுத்தமுறையானே முறையாமாறு உணர்த்துவானெடுத்துக் கொண்டார்;
அவற்றுள், இச்சூத்திரம் முதலெழுத்தை இனமடைத்தல் நுதலிற்று.

     (இ - ள்.) ஐகாரத்தை இகரத்தோடும், ஒளகாரத்தை உகரத்தோடும் சேர்க்க,
அகரமுதலான முதலெழுத்தெல்லாம் முறையே இவ்விரண்டெழுத்துத் தம்முள் இனமாம்
எ - று.

     வ - று. அஆ, 2இஈஐ, உஊஒள; எஏ, ஒஓ, க ங, ச ஞ, ட ண, த ந, ப ம, ய ர,
ல வ, ழ ள, ற ன எனவரும்.

     (பி - ம்.) 1 வரன்முறையே 2 இஈ, உஊ, எஏ, இஐ, ஒஓ, உஒள.

(16)

இனமென்றதற்குக்காரணம்

     

(71)

தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே.

     எ - ன், மேல் இவ்வெழுத்து, ‘இவ்விரண்டோரினமாய்வரும்’ என்றார், அவை
அப்படி வருவதற்குக் காரணமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) எழுத்துக்கள் தம் பிறப்பிடமே முயற்சியே 1மாத்திரையே பொருளே
வடிவே யென்றிவற்றுள் ஒன்றானும் பலவானும் 2ஒரு புடையொப்பனவாயின், இனமாம்
எ - று.