ஐந்தாவது | உரிச்சொல்லியல் | | (441) | பலவகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் | என்பது சூத்திரம். இவ்வோத்து என்னுதலியதோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும்; ஆயின், இவ்வோத்து என்னபெயர்த்தோவெனின், உரிச்சொற்களது இயல்பு உணர்த்திற்றாதலான், 1உரிச்சொல்லியலென்னும் பெயர்த்து; மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், நால்வகைச் சொல்லிற் பின்னின்றது உரிச்சொல்லாதலின், அதனோடு இயைபுடைத்தென்க.
இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உரிச்சொற்களது 2பொதுவியல் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பலவேறுவகைப்பட்ட பண்புகளையும் அறிவிப்பனவான பெயர்ச்சொல்லாகி, ஒருகுணத்திற்கே உரியவாயும் பலகுணத்திற்கே உரியவாயும் ஏனைப் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையுந் தழுவிச் செய்யுட்கே நீங்காதுவரும் கிழமையையுடையன உரிச்சொல்லாவன எ - று.
உரியசொல் யாது அஃது உரிச்சொல். பல்வகைப் பண்பென்றது, தொழிற்பண்பும் தழுவுதற்கென்க. ஆயின், ‘இருவகைப் பண்பும் பகர்பெயராகி3 என்று 4சூத்திரஞ்செய்யாதுவைத்து, ஞாபகமாகக் கூறவேண்டுவ தென்னையோவெனின், தொழிற்பெயரெல்லாம் உரிச்சொல்லெனப்படா வாதலிற் செய்யுட்கே ஏற்றுவருவன சில கோடற்கும் தொழில் கருவியாற் பெறப்படுதலால் ஏனைப் பண்புகள்போல் ஒருதலையான ஒற்றுமைச் சிறப்பினவல்லவென்பது அறிவித்தற்குமெனக் கொள்க.
வ - று. “உறுபுகழ்”, “தவச்சேய் நாட்டா ராயினும்” (நற். 115), “நனிபேதையே” (புறநா. 227), “புண்கூர்யானை” (நற். 65) எ - ம், சாலக்கொண்டான், தவச்சென்றான், நனிசொன்னான், 5நோய்கூர்ந்தது எ - ம் பெயரோடும் வினையொடும் வந்தவாறுகாண்க. பெயர்வினைகட்கு முன்பின்வருமென்னாமையின், ஏற்புழிவருமெனக்கொள்க.
(பி - ம்.) 1உரிச்சொலோத்தென்னும்பெயர்த்து 2பொதுவியல்பு3 (1) சூத்திரஞ்செய்யலாகாதுவைத்து; (2) சூத்திரஞ்செய்யாராகவைத்து 4பெறப்பாட்டினால் 5 நோய்கூர்த்தது | (1) | | (442) | 1உயிருயி ரில்லதாம் பொருட்குணம் பண்பே. | எ - ன், மேல், “பண்பு” என்றார், அஃது இஃதென்பது உணர்த்துதல் நுதலிற்று. | |
|
|