(இ - ள்.) உலகத்து உயிருள்ளதும் உயிரில்லாததுமாயடங்கும் இரு வகைப்பொருள்களினுடைய குணம் பண்பாவது எ - று.
(பி - ம்.) 1உயிருயிரல்லதாம் |
| (443) | மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின் ஓரறி வாதியா வுயிரைந் தாகும். |
எ - ன், மேல், “உயிர்” என்றார், அவ்வுயிர்க்கூறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மெய்முதலான ஐந்தனுள்ளும் ஒன்றுமுதலாகக் கீழ் நின்ற தனையுங்கொண்டு மேல்நின்றதுஅறிதலான்,ஓரறிவுயிர்முதலாக உயிர் ஐந்து கூறாம் எ-று. |
(3) |
| (444) | புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர். |
எ - ன், ஓரறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேற்சொன்ன ஓரறிவாதியான உயிர்களுட் புல்லும் மரமுமுதலானவை ஊற்றானறியும் ஓரறிவினையுடைய உயிர்களாம் எ - று. |
(4) |
| (445) | 1முரணந் தாதிநா வறிவொடீ ரறிவுயிர். |
எ - ன், ஈரறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இப்பியும் நந்துமுதலானவை மெய்யுடனே நாவானுமறியும் அறிவுடன் ஈரறிவினையுடைய உயிர்களாம் எ - று.
(பி - ம்.) 1 (1) முறணந்தாதி; (2) உறணந்தாதி |
(5) |
| (446) | சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர். |
எ - ன், மூவறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கறையானையும் எறும்பையும் முதலாகவுடையன, கீழி லிரண்டொடு மூக்கானுமறியும் அறிவுடன் மூவறிவுடைய உயிர்களாம்எ - று.
இன்னை ஒடுப்பொருளிற் கொள்க. |
(6) |
| (447) | 1தும்பிஞெண் டாதிகண் ணறிவினா லறிவுயிர். |
எ - ன், நான்கறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தும்பியும் 2ஞெண்டுமுதலான உயிர்கள் மேலனவற்றோடு கண்ணானுமறியும் அறிவுடன் நான்கறிவுயிர்களாம்எ - று.
(பி - ம்.) 1தும்பிவண்டாதி 2வண்டுமுதலான |
(7) |