242

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(448)

வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
ஆதி செவியறிவோ டையறி வுயிரே.

     எ - ன், ஐயறிவுயிராவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவை மேலனவற்றோடு செவியானும் அறியும் அறிவுடன்
ஐந்தறிவினையுடைய உயிர்களாம் எ - று.

      “ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே, இரண்டறி வதுவே யதனொடு நாவே, மூன்றறி
வதுவே யவற்றொடு மூக்கே, நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே, ஐந்தறி வதுவே
யவற்றொடு செவியே”, “புல்லு மரனுமோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப்
பிறப்பே”, “ 1நந்து முரளு மீரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “சிதலு
மெறும்பு மூவறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “ஞெண்டுந் தும்பியு
நான்கறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே”, “ 2மாவு மாக்களு மையறி
வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (மரபியல், 27 - 32) என்றார், ஆசிரியர்
தொல்காப்பியனாருமென்க.

     அஃதேல், அவர் ஆறறிவுயிரும் ஒன்றுண்டென்றாராலோவெனின், அவர்
மனத்தையும் ஒருபொறியாக்கி, அதனான் உணருமக்களையும் விலங்கினுள்
ஒருசாரனவற்றையும் ஆறறிவுயிரென்றார்; இவர் அம்மனக்காரிய மிகுதி குறைவாலுள்ள
வாசியல்லது அஃது எல்லாவுயிர்க்கும் உண்டென் பார்மதம்பற்றி
இவ்வாறுசொன்னாரென்க.

     (பி - ம்.) 1நந்துமுறணும் 2மக்களுமாவும்

(8)

 

(449)

உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்து முயிரில் பொருளே.

     எ - ன், 1உயிரில்பொருளாவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அறிவுமயமாயுள்ள உயிரொன்றையு மொழிந்து நின்ற உடம்புமுதலான
உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரில்பொருள்களாம் எ - று.

     (பி - ம்.) 1உயிரல் பொருளே
 

(450)

ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர்.

     எ - ன், மேலதற்கு ஒருபுறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒன்றுபட்டதன்மையான் ஒன்றுபோலத் தோன்றுவன வாயினும்
வேறுபட்டதன்மையான் உடலும் உயிரும் தம்முள் வேறாம் எ - று.

     இஃது என்னைசொன்னவாறோவெனின், மேல், புல்மர முதல உற்றறியும்
ஓரறிவுயிரென்றற்றொடக்கத்தனவானவற்றையே உயிராக ஒற்றுமை பற்றிச்
சொன்னாரெனினும் அவ்வுடல்களும் வேறே; உயிர்களும் வேறேயென்றவாறென்க.