5. - உரிச்சொல்லியல்

243

   
     ஏகாரம் தேற்றேகாரம்.
 
 

(451)

அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவர்ப் பிரக்கநாண் வெகுளி
துணிவழுக் காறன் 1பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்.

     எ - ன், உயிர்ப்பண்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அறிவுமுதலான இம்முப்பத்திரண்டும் இவைபோல்வன பிறவும்
உடம்பொடுகூடிய உயிர்க்குணமாம் எ - று.

     உடம்பொடுகூடிய உயிர்க்குணமெனவே கூடாவுயிரும் உளவென் பதூஉம் அவை
இனையவல்லவென்பதூஉங் கொள்க.

     வ - று. “அறிவுடையா ராவ தறிவா ரறிவிலார், அஃதறி கல்லா தவர்” (குறள்.
427), “அருளிலார்க் கவ்வுலக மில்லை” (குறள். 247) “ஆசை மாக்களோ டந்தணர்க்
காகென” (சீவக. 911), “கல்லாமை யச்சங் கயவர் தொழிலச்சம்” (நாலடி. 145), “மான
முடையார் மனம்” (நாலடி. 291), “நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை,
போற்றி யொழுகப் படும்” (குறள். 154), “ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலை யாப்,
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (குறள். 357), “அற்ற தறிந்து கடைப் பிடித்து” (குறள்.
944), “மையல் யானையின் மும்மத மார்ந்து” (சீவக. 37), “நினைத்துத்தன்
கைகுறைத்தான் றென்னவனும்” (பழ. 102), “வெறுப்ப வெறுப்பச் செயினும்” (நாலடி.
222), “உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை” (சீவக. 2816), “இரக்கமி லுள்ளத் தவர்”,
“நாணாமை நாடாமை நாரின்மை” (குறள். 833), “வெல்வது, வேண்டின் வெகுளி
விடல்” (நான்மணி. 17), “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (குறள். 671), “அழுக்கா
றெனவொரு பாவி” (குறள். 168), “அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை” (குறள். 78),
“எளியளென் றெள்ளி யுரைப்பின்” (பு. வெ. 4 : 24), “எய்த்த மெய்யே னெய்யே
னாகி” (பொருந. 68), “துன்ப முற்ற வர்க் கலால், இன்ப மில்லை யாகலி, னன்ப மற்றி
யானுனைத், துன்பத் தாற்றொ டக்கி னேன்” (சீவக. 579), “இளமை நிலைதளர மூப்போ
டிறைஞ்சி” (பு. வெ. 272), “இகலே துணையா வெரிதவழச் சீறி” (பு. வெ. 1 : 8),
“வென்றி விளையா விழுமதிலோர்” (பு. வெ. 6 : 31), “பொச்சாப்புக் கொல்லும் புகழை”
(குறள். 532), “ஊக்க முடையா னொடுக்கம்” (குறள். 486), “மறங்கந் தாக வாளமர்”
(புறநா. 93), “மாதர் வாண்முக மதைஇய நோக்கே” (அகநா. 130), “நன்றி மறப்பது
நன்றன்று