244

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
நன்றல்ல, தன்றே மறப்பது நன்று” (குறள். 108) எனவும் முறையேகாண்க. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1எளுமை

(11)

 

(452)

துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்
உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம்.

     எ - ன், உயிர்த்தொழிற்பண்புணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மெய் வாய் மூக்குக் கண் செவியென்னும் ஐம்பொறிகளானும் ஊறு
சுவை நாற்றம் ஒளி ஒலியென்னும் ஐம்புலன்களையும் நுகர்தலும் உறங்குதலும்
பிறரைத்தொழுதலும் வேண்டினவற்றை அணிதலும் மடைத் தொழில் உழவு வாணிகம்
கல்வி எழுத்துச் சிற்பமென்னும் ஆறுதொழில் (ஆறுதொழில் : திவாகரம்)
களையுமுயறலும் இவைபோல்வன பிறவும் உடம்பொடுகூடிய உயிர்த்தொழிற்பண்பாம்
எ - று.

     வ - று. “தீண்டியுங் கண்டும் பயிற்றியுந் தன்செவியால், வேண்டியுங் கங்குல்
விடிவளவும் - ஈண்டிய மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர், வெங் களத்து வேலுயர்த்த
வேந்து” (பு. வெ. 9 : 11) “துஞ்சுபுலி யிடறிய சிதடன் போல” (புறநா. 73),
“கையிற்றொழு தார்கழிய மூப்பிற்செவி கேளார், மையலவர் போலமனம் பிறந்தவகை
சொன்னார், பையநடக் கென்றுபசிக் கிரங்கியவர் விடுத்தார், தொய்யின்முலை
யவர்கள்கடை தோன்றனனி புக்கான்” (சீவக. 2013), “பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை
அரியகங் காலுக் கணிபெற வணிந்து” (சிலப். 6 : 84 - 5), “உழுது பயன் கொண்
டொலிநிரை யோம்பிப், பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர, ஓதி யழல்வழிபட்
டோம்பாத வீகையான், ஆதி வணிகர்க் கரசு” (பு. வெ. 8 : 10), “வில்லே ருழவர்
பகைகொளினுங் கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை” (குறள். 872) எனவரும்.
பிறவுமன்ன.

(12)

 

(453)

பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம்
அறுசுவை யூறெட் டுயிரில் பொருட்குணம்.

     எ - ன், உயிரில் பொருட்பண்புணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) சதுரம் ஆயதம் வட்டம் முக்கோணம் சிலை துடி 1தோரை முழா
எறும்பு கூன் குறள்முதலான வடிவுகளும், நன்றும் தீதுமான இருவகைநாற்றமும்,
வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமையான ஐந்துவண்ணங்களும், கைப்பு
புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு காழ்ப்பு 2தித்திப்பென்னும் ஆறுசுவைகளும், வெம்மை
தண்மை மென்மை வன்மை திண்மை நொய்ம்மை இழுமெனல் சருச்சரையென்னும்
எட்டுஊறும் உயிரில்லாத பொருட்பண்பாம் எ - று.

     வ - று. “சதுரம் வட்ட மாயத முக்கோண.......”, “கயற்புலால், புன்னை கடியும்
பொருகடற் றண்சேர்ப்ப” (நாலடி. 97), “பிறவிக் குருட