னுக் கைவண்ணங் காட்டி”, “அறுசுவையுண்டி” (நாலடி. 1) “நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும்” (யா. வி) எனவரும். பிறவுமன்ன.
(பி - ம்.) 1சூடி முழா வெறுப்புக்கூன் 2 இனிப்பு | (13) | | | (454) | தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்கல் 1நீங்க லடைத னடுங்க லிசைத்தல் ஈத 2லின்னவவ் விருபொருட் டொழிற்குணம். | எ - ன், அவ்விரு பகுதிப்பொருட்கும் பொதுவான தொழிற்பண்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தோன்றல்முதலான ஒன்பதும் இவைபோல்வன பிறவும் மேற்கூறிய உயிர்ப்பொருட்கும் உயிரில்பொருட்குமுரிய தொழிற்பண்பாம் எ - று.
வ - று. (பிள்ளை) + (பிறந்தான், தோன்றினான்); 3(பிறை) + (பிறந்தது, தோன்றிற்று) எ - ம், (சாத்தன்) + (செத்தான், மாய்ந்தான்); கதிர் மறைந்தது, பொருள்மாய்ந்தது எ - ம், சாத்தன்வளர்ந்தான், மரம்பெருத்தது; பிறை வளர்ந்தது, நத்தம் உயர்ந்தது, நிலாப்பரந்தது எ - ம் (வீரன்) + (மெலிந்தான், ஓய்ந்தான்); பிறை தேய்ந்தது, ஒளி மழுங்கிற்று, நூல் நொள்கிற்று எ - ம், ஊரின் நீங்கினான், தமரிற் றீர்ந்தான், கிழத்தியிற் பிரிந்தான்; ஆ ஓடிற்று, இருள் நீங்கிற்று, நோய்தீர்ந்தது, நீர் ஓடிற்று எ - ம், அரசை அடைந்தான், ஊரைச்சேர்ந்தான்; நீர்வந்தது, காற்றறைந்தது எ - ம், (நம்பி) + (நடுங்கினான், அதிர்ந்தான், தடுமாறினான், சுழன்றான், கூத்தாடினான்) பூமி கம்பித்தது, கொடி ஆடிற்று, சுடர் நடுங்கிற்று எ - ம், (நம்பி) + (சொன்னான், ஆர்த்தான், கூவினான், அழைத்தான் பாடினான்); கடல் ஒலித்தது, மழை முழங்கிற்று, இடி இடித்தது, பறை பட்டது எ - ம், (ஏந்தல்) + (ஈந்தான், பயந்தான், கொடுத்தான்); (மழை) + (உதவிற்று, பயந்தது, விளைந்தது) எ - ம் முறையேகாண்க.
இவ்வுதாரணங்களினாலே அத்தொழில் வேறுபாடுகளெல்லாமறிக.
(பி - ம்.) 1நீங்க னடுங்க லடைதல் 2இன்னனவிரு 3பிள்ளைபிறந்தது | (14) | | | (455) | சால வுறுதவ நனிகூர் கழிமிகல். | எ - ன், ஒருபண்பிற்குரிய பல சொல்லுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்வாறுசொல்லும் மிகுதியென்னும் ஒருபண்பை விளக்கும் பெயர்களாம் எ - று.
வ - று. “பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி”, “உறுவளி தூக்கு முயர்சினை மாவின்” (கலி. 84), “தவச்சேய் நாட்டா ராயினும்” (நற். 115), “நனிபே தையே நயனில் கூற்றம்” (புறநா. 227), “பொறை நில்லா நோய்கூரப் புல்லென்ற நுதலிவள்” (கலி. 3), “சினனே காமங் கழிகண் ணோட்டம்” (பதிற். 22) என முறையே காண்க. | (15) | |
|
|