| 246 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (456) | கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை 1யாப்பு வரைவே மன்றல் கரிப்பி னாகும். | எ - ன், பலபண்பிற்குரிய ஒருசொல் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கடியென்னுஞ்சொல் இப்பதின்மூன்று பொருட்கண்ணும் வரும் எ - று.
வ - று. “ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி” (அகநா. 7) எ - து காப்பு. “கடிநுனைப்பகழி” எ - து கூர்மை. “கடிமாலைசூடி” (சீவக. 1574) எ - து நாற்றம். “கண்ணாடி யன்ன கடிமார்பன்” (சீவக. 2327) எ - து விளக்கம். “ 2கடியாமங்காக்குங் கைவிளக்காகி” எ - து அச்சம். “கடிமலர் மிசை பூத்துக் கம்புளோ டன்ன மார்க்கும்” எ - து சிறப்பு. “எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்” (புறநா. 9) எ - து விரைவு. “கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்து”, (பதிற். 25 : 6)
எ - து மிகுதி. “கடியுண் கடவுட்கிட்ட செழுங்குரல்” (குறுந். 105), “அளந்தறியாப் பலபண்டம், வரம்பறியாமல் வந்தீண்டி, அருங்கடிப் பெருங்காப்பின்” (பட்டின. 131 - 3) எ - து யாப்புடைய காப்பு. “கடித்துக் கரும்பினை” (நாலடி. 156) எ - ம், ‘ஊர்கடிந்தார்’ எ - ம் வரும் இவை வரைதற்கண் வந்தன. “கடிவினை முடிகென நொடியினு ளெணிநனி” எ - து மணத்தின்கண்வந்தது; “கடிமிளகு தின்ற கல்லா மந்தி” எ - து காழ்க்குமிளகென்றவாறு.
(பி - ம்.) 1யாத்தல் 2கடியர மகளிர்க்குக் கைவிளக்காகி | (16) | | | (457) | மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை கூற்றுப் புகறன்மொழி கிளவி விளம்பறை பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே. | எ - ன், சொற்றொழிற் பண்பாவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இப்பதினாறும் சொல்லுதற் றொழிற்பண்பின்மேல் வரும் எ - று.
வ - று. “கோவலர்வாய் மாற்ற முணர்ந்து” (சீவக. 432), “இரு பிறப்பாளர் பொழுதறிந்து நுவல” (முருகு. 182), “மீனே றுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பிற், றானே றனையா னுளன்சீவக சாமியென் பான், வானேற நீண்ட புகழான்சரி தம்மிதனைத், தேனூற நின்று தெருண்டா ரவை செப்ப லுற்றேன்” (சீவக. 6), “உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்” (குறள். 232), “அறங்கரை நாவி னான்மறை முற்றிய” (தொல். பாயிரம்), “அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையார் தாநொடியும்” (பு. வெ. 335), ‘நசையுநர்க் கடையா நன்பெரு வாயி, லிசையேன் புக்கு” (பொருந. 66 - 7), “உற்றது பிறர்கள் கூற வுணர்ந்தனை”, “புகன்ற வன்றியும் புறமிக வருமே”, | |
|
|