“காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறுந். 2), “கிளக்குங் கிளவி பாண கேளினி”, “மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்” (நன். 62), “அறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்” (கலி. 30), “ஒருவன், செய்தி கொன்றோற் குய்தி யில்லென, அறம்பா டின்றே யாயிழை கணவ” (புறநா. 34), “பழனக் கழனி நீர்நாடன் பாவை வார்த்தை பகர்குற்றேன்”, “ஏற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே” (சீவக. 432) என முறையே காண்க. | (17) | | | (458) | முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை இரக்கழுங் கிளம்ப லிமிழ்குளி றதிர்குரை கனைசிலை சும்மை கவ்வை கம்பலை அரவ மார்ப்போ டின்னன வோசை. | எ - ன், ஒலித்தற்றொழிற்பண்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற் றொழிற்பண்பின்கண் வரும் எ - று.
வ - று. “முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ” (புறநா. 18), “குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை”, “ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு” (ஐந். ஐம். 28), “கலிகெழு கடவுள் கந்தங் கைவிட” (புறநா. 52), “பறையிசை யருவி முள்ளூர்” (புறம். 126), “தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ” (புறநா. 4), “பிளிறுவார் முரசம்” (சீவக. 450), “இரைக்கு மஞ்சிறைப் பறவைகள்” (சூளா. கல்யாண. 51), “இரங்கு முரசி னினஞ்சால் யானை” (புறநா. 137), “இரும்பிழி மாரி யழுங்கன் மூதூர்” (அகநா. 122), “காலை முரசங் கனைகுர லியம்பும்” (சிலப். ஆய்ச்சியர்), “இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை” (புறநா. 19), “குளிறு முரசங் குணில்பாய” (பு. வெ. 3 : 13), “களிறுங் களித்ததிருங் கார்” (பு. வெ. 138), “குரைபுனற் கன்னி” (சீவக. 39), “கனைகடற் றண் சேர்ப்ப” (நாலடி. 138), “சிலைத்தார் முரசங் கறங்க” (புறநா. 36), “தள்ளாத சும்மை மிகுதக்கண நாடு நண்ணி” (சீவக. 20), “கவ்வைநீர் வேலிக் கடிதேகாண்” (பு. வெ. 23), “வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்” (யா. வி. ‘பூந்தாமரை’), “அறைகட லரவத் தானை யச்சுவக்கிரீவன்” (சூளா. சீயவதை. 108), “ஆர்த்தபல் லியக்குழாம்” (சூளா. தூது. 45) என முறையே காண்க.
இவ்விருவகைப்பண்பும் பெயரையும் வினையையும்விட்டு நிகழாமை காட்டிய உதாரணங்களிலே கண்டுகொள்க.
“பலவகைப் பண்பும் பகர்பெய ராகி” என்றமையான், இவ்விரு வகைப் பண்புப் பெயர்களுள்ளும் சில உருபேற்றலும் தனியே வருதலும் உளவெனக்கொள்க. | (18) | | | (459) | இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணிகுணப் பெயர்கள் | |
|
|