248

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
    சொல்லாம் பரத்தலிற் 1பிங்கல முதலா
நல்லோ 2ருரிச்சொலி னயந்தனர் கொளலே.

     எ - ன், இவ்வோத்திற்கு உரியதோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வெழுத்து இவ்விடத்து இவ்வாறாகும், இப்பதம் இவ்விடத்து
இவ்வாறாகும், இச்சொல் இவ்விடத்து இவ்வாறாகுமென்று இலக்கணஞ்சொல்லுநூலுள்
உலகிலுள்ள பொருள்கட்கும் குணங்கட்கும் இன்னதற்கு இன்னதுபெயரென்று
தனித்தனியே சொல்லலுற்றால் எனைத்தும் பெருகுதலின், ஈண்டுச் சொல்லாதொழிந்தாம்;
அவை பிங்கலமுதலான புலவர்களாற் சொல்லப்பட்ட உரிச்சொற்பனுவல்களுள் விரும்பி
அறிந்து கொள்க எ - று.

     அஃதேல், இச்சொல் இவ்வொருபொருட்குரித்து, இச்சொற் பல
பொருட்குரித்தென்று சொல்லல் சொல்லிலக்கணமாகலின், ஈண்டுச் சொல்லாதொழிதல்
குன்றக்கூறலென்னுங் குற்றமாம் பிறவெனின், ஆகாது; என்னை? பொருளாவன இவை,
குணமாவன இவையென்றும் இவற்றைப்பற்றி இவ்வாறு வரும் சொற்களென்றும்
பெயரோத்தினுள்ளும் ஈண்டும் இவற்றின் இலக்கணமெல்லாம் சொல்லுதலானும்
முடிவிடங் கூறலானும் அவற்றையும் வேறே ஒரு நூலாகவே முன்னோர்
சொல்லுதலானும், வடமொழி முதலான பிற கலைக்கடல்களுள்ளும் வேறே
சொல்லுதலானு மென்க.

     இது முடிவிடங்கூறல் என்னும் தந்திரவுத்தியாம்.

     (பி - ம்.) 1பிங்கலர்முதலா 2உரிச்சொலுள்

(19)

 

(460)

சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
தெற்றென வுணர்த 1றெள்ளியோர் திறனே.

     எ - ன், இவ்வதிகாரத்துட்சொன்ன பொருட்பகுதிகட்கெல்லாம் ஆவதோர்
புறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) சொற்களையெல்லாம் தனித்தனியே எடுத்து இஃது இன்ன சொல்
இவ்வாறாம், இச்சொல் இப்பொருட்டென்று 2சொல்லப்புகின் வரம்பின்மையாமாதலின்,
ஈண்டுச் சொன்னவற்றுடனே சொல்லாதவற்றையும் ஒப்பித்துக்கொண்டு விளங்கஅறிதல்
உணர்வுடையோர்க்கு வழக்காவது எ - று.

     இஃது என்சொன்னவாறோவெனின், இவ்வதிகாரத்துட் சொன்ன ஒரு மொழியே
தொடர்மொழியே பொதுமொழியே திணையே பாலே இடனே வழக்கே செய்யுளே
வெளிப்படைநிலையே குறிப்புநிலையே பெயரே வேற்றுமையே வினையே
தொகைநிலையே பொருண்மயக்கே தொகாநிலையே வழுவே வழுவமைப்பே காலமே
வினாவே செப்பே மரபே இயற்கையே செயற்கையே பொருள்கோளே இடைச்சொல்லே
உயிர்ப்பொருளே உயிரில்பொருளே அவற்றின்பண்பே