5. - உரிச்சொல்லியல்

249

   
உரிச்சொல்லேயென்றிவற்றுட் சொல்லா தொழிந்தன உளவாகிலும் அவற்றிற்கெல்லாம்
இதுவே ஓத்தாகக் கொண்டு செலுத்துகவென்று குற்றம்வாராமல் நூலைப்
பாதுகாத்தவாறெனக்கொள்க.

     (பி - ம்.) 1றெளிவோர் திறனே 2சொல்லின்

(20)

 

(461)

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.

     எ - ன், இந்நூலிற்சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்கநோக்காய் நிற்பதொரு
புறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) முற்காலத்துள்ளன சில விடுதலும் இக்காலத்துச் சில வருதலும்
காலக்கூறுபாட்டினானே குன்றக்கூறல் மிகைபடக் கூறலென்னும் குற்றமாகா எ - று.

     அவை.....அழன், புழன், “கேட்டையென்றா நின்றையென்றா,.......... கண்டை
யென்றா” (தொல். எச்ச. 30) என்றற்றொடக்கத்தன அக்காலத் துள; இக்காலத்து
வழங்கா. அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எங்ஙனம் என்புழி ஙவ்வும், சம்பு சளி சரடு
சரி சமழ்ப்பு சள்ளை என்புழிச் சகரமும் இக்காலத்து ஈண்டு மொழிக்கு
முதலாயினவென்க. பிறவுமன்ன.

     இவ்வாறே மேல்வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க.

(21)

ஐந்தாவது உரிச்சொல்லியல் முற்றிற்று.
 

கட்டளைக்கலித்துறை
 

    இருதிணை மூவிட நான்மொழி யைம்பா லறுதொகையேழ்
அருவழு வெட்டுரு பொன்பான் றொகாநிலை யாய்ந்தவெச்சம்
ஒருபது கோளெட்டு முப்பொழு தீரிட மோரியல்பாய்
வருமொழி மூன்று முணரச்சொல் வண்மை வருந்திருவே.


வெண்பா
 

    பேரறு பத்திரண்டு பின்வினையெண் ணான்குபொது
ஓரறுபத் 1தெட்டிடை மூவேழின் - மேலொன்
றுரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின்
விரி2யிருநூற் றோரைந்தா வேண்டு.

     (பி - ம்.) 1தெட்டிடையின் 2யிருநூற்றீரிரண்டா
 

இரண்டாவது சொல்லதிகாரம் முற்றிற்று.
 

சொல்லும் பொருளுமெனத் தோன்றித்தோன் றாத்துணையை அல்லும் பகலு மடை.