1. - எழுத்தியல்

25

   
     அஆக்கள் இடத்தானும் முயற்சியானும், அறாயிரம், ஆறாயிரமென்னும்
பொருளானும், வடிவானும் ஒருபுடையொத்து இனமாயின. இஈக்கள் இடத்தானும்
முயற்சியானும், இராயிரம், ஈராயிரமென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின;
ஐகாரம் இவற்றுள் இடத்தானும் முயற்சியானும் ஒத்து இகரத்தோடு கூடி இனமாயிற்று.
உஊக்கள் இடத்தானும் முயற்சியானும், உங்கு, ஊங்கு என்னும் பொருளானும்
வடிவானும் ஒருபுடையொத்து இனமாயின. ஒளகாரம் இவற்றுள் இடத்தானும்
முயற்சியானும் உகரத்தோடுகூடி இனமாயிற்று. எ ஏக்கள் இடத்தானும் முயற்சியானும்,
எழாயிரம் ஏழாயிரமென்னும் பொருளானும், வடிவானும் ஒருபுடையொத்து இனமாயின. ஒ
ஓக்கள், இடத்தானும் முயற்சியானும், ஒராயிரம், ஓராயிரமென்னும் பொருளானும்,
வடிவானும் ஒருபுடையொத்து இனமாயின. க ஙக்கள், முயற்சியானும் மாத்திரையானும்,
குளக்கரை, குளங்கரையென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின. ச ஞக்கள்,
முயற்சியானும் மாத்திரையானும், மச்சிகன், மஞ்சிகனென்னும் பொருளானும்
ஒருபுடையொத்து இனமாயின. ட ணக்கள், முயற்சி யானும் மாத்திரையானும், மட்குடம்,
மண்குடமென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின. த நக்கள் முயற்சியானும்
மாத்திரையானும், பாழ்த்தூறு, பாழ்ந்தூறு என்னும் பொருளானும் ஒருபுடையொத்து
இனமாயின. ப மக்கள், முயற்சியானும் மாத்திரையானும், வேய்ப்புறம்,
வேய்ம்புறமென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின. ய ரக்கள் இடத்தானும்
மாத்திரையானும், *வேயல், வேரலென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின.
லவக்கள் இடத்தானும் மாத்திரையானும், எல்லாவகை, எவ்வகையென்னும்
பொருளானும் ஒரு புடையொத்து இனமாயின. ழ ளக்கள் இடத்தானும் மாத்திரையானும்,
(காழகவுடையான், காளகவுடையானென்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின.
றனக்கள், முயற்சியானும் மாத்திரையானும், (நற்கு நன்கு என்னும் பொருளானும்
ஒருபுடையொத்து இனமாயின.

     (பி - ம்.) 1 அளவே 2 ஒருபுடையான்
 

3. எழுத்தின்முறை

 

(72)

சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே.
     எ - ன், நிறுத்தமுறையானே முறையாமாறுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) சிறப்பைப்பற்றியும் இனத்தைப்பற்றியும் ஒன்றன்பின் ஒன்றுசென்று
தொன்றுதொட்டு அகரமுதலாக உலகத்து 1 நடக்கின்ற கிடக்கைமுறைதானே நூலுள்ளும்
முறையாவது எ - று.

     * சிறுமூங்கில் ( கருமையையுடைய ஆடையினன் ( நன்மை