| 26 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | அகரம் தானேநடந்தும் நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகனென்னும் பரமர் திருநாமத்திற்கு ஒருமுதலாயும், அறம் பொருளின்பமென்னும் முப்பொருளின் முதற்பொருட்கும், அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் முன்வைக்கப்பட்டது. இடம் முயற்சி பொருள் வடிவுகள் ஒருபுடையொப்புமையின் அகரத்தின்பின் ஆகாரம் வைக்கப்பட்டது. இடம் முயற்சி பொருள்கள் ஒருபுடையொப்புமையின் இகரத்தின்பின் ஈகாரம் வைக்கப்பட்டது. இவ்வாறே ஒழிந்த எழுத்துக்கள் தம் கிடக்கை முறைக்காரணம் அறிந்துகொள்க.
முறை முற்றும்.
(பி - ம்.) 1 நடக்கின்றமுறைதானே | 4. எழுத்தின் பிறப்பு | | | (73) | நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுந்தணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் 1றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. | எ - ன், நிறுத்தமுறையானே எழுத்துக்களது ‘பிறப்பு வேறுபாடு உணர்த்துவானெடுத்துக்கொண்டார், அவற்றுள், இச்சூத்திரம் அதன் பொதுவிதியுணர்த்துதனுதலிற்று.
(இ - ள்.) விகாரப்படாது தன்னியல்பினின்ற உயிர், மொழிவலென்னு முள்ளந்தோற்றி முயல உண்ணின்ற வளி கடாவ ஆண்டு நின்ற ஒளியணு வீட்டம் விசைத்தெழுந்து நெஞ்சே மிடறே உச்சியே மூக்கேயென்றிந்நான் கிடத்தையும் முதலடைந்து இதழே நாவே பல்லே அண்ணமே என்றிந் நாலிடத்தையும் பின்பே அடைய இவற்றது முயற்சி விகற்பத்தாற் பல்வேறு வகைப்பட்ட எழுத்தொலியாய்ப் புலப்படல் எழுத்துக்களது பிறப்பாம் எ - று.
என்னை? “ஆற்ற லுடையுயிர் 3முயற்சியி னணுவியைந், தேற்றனவொலியாய்த் தோற்றுதல் பிறப்பே” என்றார் ஆசிரியர் அவிநயனாருமெனக் கொள்க.
(பி - ம்.) 1றிதணா 2பிறவிவேறுபாடு 3முயற்சியான் | (19) | முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு | | | (74) | அவ்வழி, ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. | எ - ன், முதலெழுத்துக்கட்கு இடமாமாறுணர்த்துதல்நுதலிற்று. | |
|
|