1. - எழுத்தியல்

27

   
     (இ - ள்.) மேற்கூறியநெறியாற் பிறக்குமிடத்துப் பன்னீருயிருக்கும் இடையினம்
ஆறிற்கும் இடம் மிடறாகும்; மெல்லினமாறும் மூக்கை இடமாகப்பொருந்தும்;
வல்லினமாறும் நெஞ்சை இடமாகப்பெறும்எ - று.
 

(20)

முதலெழுத்துக்களின் முயற்சிப்பிறப்பு

 

(75)

அவற்றுள்,
முயற்சியுள் அஆ வங்காப் புடைய.
     எ - ன், அகர ஆகாரங்கட்கு முயற்சியாமாறுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துக்களுள், அகரமும் ஆகாரமும்
அங்காந்துசொல்லுதலை முயற்சியாகவுடையவாம் எ - று.

     ஆ ஆ என உச்சரித்துக் கண்டுகொள்க.
 

(21)

 

(76)

இஈ எஏ ஐயங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே.
     எ - ன், இவ் வைந்தெழுத்துக்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இக்கூறப்பட்ட ஐந்தெழுத்தும் அங்காப்புடனே அண்பல்லை
முதனாவிளிம்பு உறும் முயற்சியாற்பிறக்கும் எ - று.

     இ ஈ எ ஏ ஐ என உச்சரித்துக் கண்டுகொள்க.
 

(22)

 

(77)

உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே.

     எ - ன், இவ்வைந்துயிருக்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) 1இக்கூறப்பட்ட ஐந்தெழுத்தும் இதழைக்குவித்துச் சொல்லு முயற்சியாற்
பிறக்கும் எ - று.

     உ ஊ ஒ ஓ ஒள என உச்சரித்துக் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1இக்கூற்றைந்தெழுத்தும்
 

(23)

 

(78)

கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே.
     எ - ன், இவ்வாறெழுத்துக்கும் முயற்சியாமாறுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) 1ககரமும் ஙகரமும் முதல்நா முதலண்ணத்தை உறிஞ்சப் பிறக்கும்;
சகரமும் ஞகரமும் இடைநா இடையண்ணத்தை உரிஞ்சப் பிறக்கும்; டகரமும் ணகரமும்
நுனிநா நுனியண்ணத்தை உரிஞ்சப் பிறக்கும் எ - று.

     கங சஞ டண என உச்சரித்துக் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1ககாரமும் ஙகாரமும் பின்னும் இப்படியே.
 

(24)

 

(79)

அண்ப லடிநா முடியுறத் தநவரும்.
     எ - ன், இவ்விரண்டிற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.