(இ - ள்.) அண்பலடியை நாநுனி ஒற்றத் தகரமும் நகரமும் பிறக்கும். எ - று.
த ந என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(25) |
| | (80) | மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும். |
எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேலிதழும் கீழிதழுமேவப் பகரமும் மகரமும் பிறக்கும் எ - று.
ப ம என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(26) |
| | (81) | அடிநா வடியண முறயத் தோன்றும். |
எ - ன், யகரத்திற்கு முயற்சியாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) அடிநா அடியண்ணத்தைச்சார யகரம் பிறக்கும் எ-று.
ய என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(27) |
| | (82) | அண்ண நுனிநா வருட ரழவரும். |
எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அண்ணத்தை நுனிநாத் தடவ ரகரமும் ழகரமும் பிறக்கும் எ - று.
ர ழ என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(28) |
| | (83) | அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். |
எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அண்பல்முதலை நாவிளிம்பு புடைத்து ஒற்ற லகரம் பிறக்கும்; அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி மெல்ல உற ளகரம் பிறக்கும் எ - று.
ல ள என உச்சரித்துக் கண்டுகொள்க. |
(29) |
| | (84) | மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. |
எ - ன், வகரத்திற்கு முயற்சியாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மேற்பல்லானது கீழிதழை உற வகரம் பிறக்கும் எ-று. வ என உச்சரித்துக் கண்டுகொள்க. |
| | (85) | அண்ணா நுனிநா நனியுற றனவரும். |
எ - ன், இவ்விரண்டெழுத்திற்கும் முயற்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. |