1. - எழுத்தியல்

29

   
     (இ - ள்.) அண்ணத்தை நாநுனி 2மிகவுற றகரமும் னகரமும் பிறக்கும் எ - று.
ற ன என உச்சரித்துக் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1 நனியுறிற் 2மிகவுறில்
 

(31)

சார்பெழுத்தின் இடமும் முயற்சியும்

 

(86)

ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய.
     எ - ன், சார்பெழுத்திற்கு இடமும் முயற்சியும் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஆய்தவெழுத்திற்கு இடம் தலையாம்; அங்காந்து சொல்லுதல்
முயற்சியாம். அல்லாத 1சார்பெழுத்துக்களுக்கும் இட முயற்சிகள் தத்தம்
முதலெழுத்துக்களோடொப்பனவாம் எ - று.

     வ - று. க கா, எஃகு, ஆஅ, மங்ங்கலம், கேண்மியா, நாகு, மைப்புறம், மௌவல்,
வரும்வணிகன், கஃறீது என முறையே உச்சரித்துக் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1சார்பெழுத்துக்களுக்கு இடங்காரணங்கள்; சார்பெழுத்துக்கள்
இடமுயற்சிக் காரணங்களில்
 

(31)

 

(87)

எடுத்தல் படுத்த னலித லுழப்பில்
திரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும்.

     எ - ன், மேலுரைத்தவற்றிற்கு ஒரு புறநடை யுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) பலவெழுத்துக்களுக்கும் தானமுயற்சிகள் ஒன்றாகச் சொல்லப்பட்டனவேனும், எடுத்தல் படுத்தல் நலிதல் முதலான 1உழப்புவிகற்பங்களினானே ஒன்றுக்கொன்று சிறிது வேறுபாடுடையவாம் எ - று.

     உதாரணம், முன்னர்க்காட்டினவற்றுட் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1அளவு விகற்பங்களினானே

(33)

 

(88)

புள்ளிவிட் டவ்வொடு 1முன்னுரு பாகியும்
ஏனை யுயிரோ 2டுருபு 3திரிந்தும்
மேவிய மேவிய வுயிரள பாயதன்
வடிவொழித் திருவயிற் பெயரொடும்
ஒற்று முன்னாய் வருமுயிர் மெய்யே.

     எ - ன், சார்பெழுத்துக்களின் தோற்றம் இன்னும் ஒருவகையான் உணர்த்துவானெடுத்துக்கொண்டார், அவற்றுள் இச்சூத்திரம் உயிர் மெய்யாமாறு உணர்த்துதல்நுதலிற்று.