பாயிரம்

3

   
    நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
 

5

டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.s
     (இ - ள்.) இவ்வியல்பினது 1நூலாவது எ - று.
     ஓரிருபாயிரந்தோற்றலாவது பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும்
முன்னுடைத்தாதல்.
     ஏனைப்பகுதிகளைத் 2தத்தம் இலக்கணச்சூத்திரத்துட்காண்க.
     (பி - ம்.) 1நூலென்றவாறு 2தத்தம்சூத்திரத்

(4)

நூலின் வகை

 

(5)

*முதல்வழி 1புடையென நூன்மூன் றாகும்.
     (இ - ள்.) இம்மூன்றுகூற்றதாம் நூல். எ - று.
     (பி - ம்.) 2சார்பென

(5)

முதல்நூல்

 

(6)

அவற்றுள், -
(வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.
     (இ - ள்.) இவ்வகையால்வருவது 1முதனூலாவது எ - று.
     (பி - ம்.) 1முதனூலென்றவாறு

(6)

வழிநூல்

 

(7)

முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்.
     (இ - ள்.) இவ்வகையால்வருவது 1வழிநூலாவது எ - று.
     (பி - ம்.) 1வழிநூல்

(7)

புடைநூல்

 

(8)

இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்.

     * இச்சூத்திரமுதலியநான்கும் இறையனாரகப்பொருள் முதற்சூத்திரவுரையிலும்,
     யாப்பருங்கலம் முதற்சூத்திரவுரையிலும் காணப்படுகின்றன.
     ( தொல்காப்பியம், மரபியல், 94.