30

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) இச்சொன்னபெற்றியிற் றிரியாதுவருவது உயிர்மெய் எ - று.

     எனவே ஒருமெய் அகரத்தோடு முன்னருருவேயாகியும், ஒழிந்த உயிர்களோடு
உருவுவேறுபட்டும் வருமென்பது போந்தது. போதவே பதினெட்டுமெய்யும்
பன்னிரண்டுயிரோடுங்கூடிப் பன்னிரு பதினெட்டு இருநூற்றொருபத்தாறாய் மேற்சொன்ன
விரியான் வந்தவாறு கண்டு கொள்க.

     வ - று. க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ என வரும்.
ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. உயிர்மெய் யென்பது உம்மைத் தொகை.

     (பி - ம்.) 1முன்னுருவு 2டுருவு 3திரிந்துமுயிரளவாய்

(34)

முற்றாய்தம்

     

(89)

குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.

     எ - ன், நிறுத்தமுறையானே ஒருமொழியிடத்துவரும் முற்றாய்தத் தோற்றமாமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) குற்றெழுத்தின் முன்னர் உயிரோடு கூடிய வல்லெழுத்து
ஆறன்மிசையே பெறப்படும், ஆய்தவொற்று எ - று.

     ஆய்தமானபுள்ளி ஆய்தப்புள்ளி. ‘ஆய்தப்புள்ளி’ என்றார், இதனையும்
ஒற்றின்பாற் சார்த்துதற்கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல்வேண்டுமெனின்,
சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக்கொள்க.

     வ - று. எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனவரும். அஃகாமை,
வெஃகாமை, அஃகி, வெஃகி, 1அஃகோ என்பன பிறவுயிர்களோடும் வந்தன. 2
“விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாதர், இலஃஃகு முத்தினினம்” என இவ்வாறு
குறிலிணைக்கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய்
நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றில்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும்
ஒற்றாய்வருமெனக்கொள்க. இருபஃது, அஃகடிய எனப் புணர்ச்சியிடத்து வரும்
ஆய்தங்களை அவ்விதியிற்காண்க.

     (பி - ம்.) 1அஃகா, அஃதோ 2விலஃஃகு

(35)

உயிரளபெடை

     

(90)

இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே.
     எ - ன், வைத்தமுறையானே உயிரளபெடைத் தோற்றமாமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) செய்யுட்கள் ஓசை சிதைய வந்தவிடத்து மொழிமுதலிடை
கடையென்னும் மூன்றிடத்தும்நின்ற நெட்டெழுத்துக்கள்தாம் இரண்டு

     * ‘அஃகாமை’ முதலிய ஐந்தும் சிலபிரதிகளில் இல்லை.