மாத்திரையின் நீண்டிசைக்கப்பெறும். ஆண்டு அவற்றிற்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் அவ்வளவிற்குக் குறியாய்வந்து நிற்கும் எ - று.
எனவே இரண்டுமாத்திரையானது மூன்றுமாத்திரையாய் நீடலல்லது இரண்டெழுத்துக்கூடி மூன்றுமாத்திரையா மென்பாரை விலக்கினாருமாம்.
வ - று. வாஅகை, ஈஇகை, ஊஉகம், பேஎகன், தைஇயல், 1தோஒகை, மௌஉவல் எனவும்; படாஅகை, 2பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், புரோஒசை, 3மனௌஉகம் எனவும்; 4குராஅ, குரீஇ, 5குழூஉ, 6விலேஎ, விரைஇ, உலோஒ, 7அனௌஉ எனவும் முறையே மூவிடத்தும் ஏழுநெட்டெழுத்தும் அளபெழுந்தன. தனிநிலை யளபெடை வேண்டாராயினார், அது நெட்டெழுத்தோரெழுத்தொரு மொழியாய் முதனிலை யளபெடையாய்த்தான் இறுதிநிலை யளபெடையாய்த்தான் அடங்குதலினென்க. அஃதேல், “தனிநிலை யிடைநிலை யீறென, நால்வகைப் படூஉமள பாய்வகுமிடனே” என்னும் முன்னோர்மதத்தோடு முரணும்பிறவெனின், “இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித், திரிபுவே றுடையது புடைநூ லாகும்” என்பதனாலும் மாறுபாடாகாதென்க. ‘ஐஒளஇஉச் செறிய’ என்பதனான், ஐகாரத்துக்கு இகரமும், ஒளகாரத்துக்கு உகரமும் இனக்குறிலாமெனக் கொள்க. “எழுத்துக் குறியிட மாத்திரை நான்கும், வழுக்காது வைக்க வகுத்து” என்பவாகலின், ஈரெழுத்துக்கூடி அளபாமென்பார் குறி கூறிற்றிலருமாம்.
(பி - ம்.) 1தோஒரை 2வரீஇகம் 3மணிமௌஉலி 4கடாஅ, கராஅ 5கழூஉ 6மிலேஎ 7அணௌஉ | (36) | ஒற்றளபெடை. | | | (91) | ஙஞண நமன வயலள வாய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே. | | | எ - ன், ஒற்றளபெடைத்தோற்றம் உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) இச்சொல்லப்பட்ட பத்தொற்றும் ஆய்தமும் குறிலிணைக் கீழும் குறிற்கீழும் மொழியிடையினும் ஈற்றினும்நின்று அளபெடுக்கும்; அவை இரட்டித்துநிற்றல் அவற்றிற்கு அளவு குறியாம் எ - று. ஆய்தம் இடையிலன்றித் தோன்றாமையின், இரண்டிடத்தும் ஈற்றில் வந்து அளபெழாதெனக்கொள்க. இஃது, ‘உய்த்துணரவைப்பு’ என்னும் தந்திரவுத்தி. வ - று. அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு எ - ம்; மங்ங்கலம், மஞ்ஞ்சு; மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு எனவும் ஈரிடத்தும் இடைநிலையளபெழுந்தன. “அரண்ண்கொண்ட வடுதோளினர்”, “வலம்ம் பட்ட 1வாய்வாளர்” | |
|
|