32

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
“கலன்ன்கொண்ட 2கன்மார்பர்”, “பகல்ல்லன்ன பண்புரைஇ”, “திரள்ள்சேனை
செலநீக்கி” எனவும், கண்ண்டண்ண் ணெனக் கண்டுங்கேட்டும்” (மலைபடு. 352),
“தம்ம்படையைத் தாநோக்கி”, “மின்ன்னன்ன வேல்விளக்கி”, “இவ்வ்வுலகை
யினிதாண்டு”, 3 “செய்ய் தொழிலிற் செலநோக்கி”, “கல்ல்லன்ன வன்னெஞ்சின்”,
“கொள்ள் ளென்று கொடுக்கலராய்” எனவும் ஈரிடத்தும் இறுதிநிலை அளபெழுந்தன.
ஈண்டுக் காட்டாதொழிந்தன அருகியன்றி வாராவெனக்கொள்க. “இசைகெடின்” என்று
உயிரளபெடைக்கு உரைத்ததனை ஈண்டும் வருவித்துக் கொள்க. ‘வேறு’ என்றதனானே,
குரவை, அரயர் என்புழி ஒற்றுக்களும், வரகு என்புழி ஆய்தமும், முன்
இல்லையேயெனினும், இசைகெடின் அவற்றையுண்டாக்கியும், அவற்றானும் நிரம்பாவிடின்
அவற்றை அளபெடுப்பித்தும் ஓசை நிறைக்கப்படும்; என்னை? “செய்யுட்க ளோசை
‘சிதையுங்கா லீரளபு, மையப்பா டின்றி யணையுமா - மைதீரொற், றின்றியுஞ் செய்யுட்
கெடினொற்றை யுண்டாக்கு, குன்றுமே லொற்றளபுங் கொள்” என
5மாபுராணமுடையாரும் சொன்னாராகலின். “அம்பொ ரைந்துடைய்ய காம னைய
னென்ன வந்தண, னம்பு நீர ரல்லர் நன்கு ரங்கு நீர ராயினும், தங்கு ரவ்வர்
தாங்கொடுப்பி னெஞ்சு நேர்ந்து தாழ்வர்தாம், பொங்க ரவ்வ வல்கு லாரெ னப்பு கன்று
சொல்லினான்” (சீவக. 1997.) இதனுள் ஒற்றில் வழி ஒற்று வந்தவாறு கண்டுகொள்க.
பிறவுமன்ன.

     (பி - ம்.) 1வாள்வயவர் 2கவின் 3செய்ய்யதொழிற் சேய்நோக்கி 4சிதையுமேல்
5பூதபுராணமுடையாரும்

(37)

குற்றியலிகரம்

     

(92)

யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய.
     எ - ன், குற்றியலிகரத்தோற்றம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) யகரம் மொழிக்கு முதலில் வந்தவிடத்துக் குற்றுகரம் திரிந்துவரும்
இகரமும் மியாவென்னும் அசைநிலையிடைச்சொல் இகரமும் குற்றியலிகரமாம் எ - று.

     வ - று. நாகியாது, எஃகியாது, வரகியாது, கொக்கியாது, குரங்கியாது,
1
தொள்கியாது எனவும்; கேண்மியா, சென்மியா எனவும் வரும். பிறவும் இவ்வாறே
ஒட்டிக்கொள்க.

     (பி - ம்.) 1தெள்கியாது

(38)

குற்றியலுகரம்

     

(93)

நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடை
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே.