| 34 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (இ - ள்.) ளகர லகரந்திரிந்த ணகரனகரங்கண்முன்பும் வகரமிசையும் நின்ற மகரம் குறுகும் எ-று.
வ - று. “பசுப்போல்வார் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர், முசுப்போல முள்காந் திருப்பார் - பசுத்தான், வெருளினுமெல்லாம் வெருளுமஃ தன்றி, மருளினு மெல்லா மருண்ம்”, “எம்மொடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னொடு, 1கூவிளமொத்ததும் போன்ம்”, வாழும்வளவன் எனவரும்.
(பி - ம்.) 1கூவிளம்பூத்ததும், கூவிளம்போர்த்ததும். | (41) | | | (96) | லளவீற் றியைபினா மாய்த மஃகும். | எ - ன். ஆய்தக்குறுக்கமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) லகரளகரவீறு புணர்வுழிவரும் ஆய்தம் குறுகும் எ-று.
வ - று. கஃறீது, முஃடீது எனவரும். பிறப்புமுற்றும். | (42) | 5. எழுத்தின் உருவம் | | | (97) | தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மெகர மொகரமெய் புள்ளி. | எ - ன், நிறுத்தமுறையானே வடிவாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) எல்லாவெழுத்தும் பழையவாகி வருகின்ற வரிவடிவினவேயாம்; அவ்விடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளிபெற்று நிற்பனவாம் எ - று.
வ - று. எரி, எரி; 1ஒளி, ஒளி; உல்கு, உலகு; மண்மகள், மணமகள்; கண்மணி, கணமணி எனக் கண்டுகொள்க. ‘ஆண்டு’ என்ற மிகையானே, தாது, ஏது என்றற்றொடக்கத்து ஆரியமொழிகளும், எட்டு, கொட்டு என்றற்றொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றியாது, 2நாடியாது, எட்டியாண்டுளது என்றற்றொடக்கத்துப் புணர்மொழிப்பொருள் வேறுபாடுகளும் அறிதற்பொருட்டுக் 3குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற் புள்ளிகொடுப்பாரும் உளரெனக் கொள்க.
உருவமுற்றும்.
(பி - ம்.) 1ஒதி, 2மாடியாது 3குற்றிகரக்குற்றுகரங்கட்கு | (43) | 6. எழுத்தின்மாத்திரை | | | (98) | மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே குறிலோ டையௌக் குறுக்க மொற்றள பரையொற் றிஉக் குறுக்க மாய்தம் கால்குறண் மஃகா னாய்த மாத்திரை. | |
|
|