1. - எழுத்தியல்

35

   
     எ - ன், நிறுத்தமுறையானே எல்லாவெழுத்திற்கும் அளவாமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) உயிரளபெடை மூன்றும், நெட்டெழுத்து இரண்டும் குற்றெழுத்தும்
ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் 1ஒற்றளபெடையு மென்னுநான்கும் ஓரொன்று
ஒன்றும், மெய்களும் குற்றியலுகரங்களும் ஆய்தமும் ஓரொன்றுஅரையும்
மகரக்குறுக்கமும் ஆய்தக்குறுக்கமும் ஓரொன்று2காலும் மாத்திரைகளளவாகவுடையவாம்
எ - று.

     அன்னவாதல் அவற்றிற்கு மேற்காட்டிய உதாரணங்களுட் காண்க.

     (பி - ம்.) 1ஒற்றளபெடையும் இவைநான்கும். 2காலும்அளபாக.
 

(44)

ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும்

 

(99)

இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை.
     எ - ன், மேல் எழுத்திற்கு அளவு மாத்திரையென்றார், ஈண்டு
அம்மாத்திரையாவது இஃதென்பது உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) விகாரப்படாதே இயல்பாக எழாநின்ற மாந்தருடைய கண்ணிமையும்
கைந்நொடியும் ஆண்டுச்சொன்னமாத்திரைக்கு அளவாம் எ - று.

     கட்புலனாகிய இமைக்காலமும் செவிப்புலனாகிய நொடிக்காலமும் கருதிக்
1கோடற்கு இரண்டும் ஓதினாரென்க.

     (பி - ம்.) 1கொண்டற்கு

(45)

 

(100)

ஆவியு மொற்று 1மளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்.
     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) உயிரும் ஒற்றுமென்னும் இருகூற்றெழுத்தும் தமக்குச் சொன்ன
மாத்திரைகளின் மிக்கிசைக்கவும்பெறும், இசையும் விளியும் பண்டமாற்றும்
முதலானவற்றின்கண் எ - று.

     ‘ஆதி’ என்றதனால், நாவலும் முறையீடும் புலம்பும் குறிப்பிசை
முதலாயினவுங்கொள்க. 2 “கஃறென்னுங் கல்லதரத்தம்” என்பது குறிப்பிசை. ஏனைய
வந்துழிக்காண்க. உயிர் பன்னிரண்டுமாத்திரையும் ஒற்றுப் பதினொருமாத்திரையும்
நீளுமென்றார் கந்தருவநூலுடையார். அவை வந்த வழிக்காண்க. நாவல் -
போர்க்கழைத்தல்.

     மாத்திரைமுற்றும்.

     (பி - ம்.) 1 அளபிறந்து 2கல்லென்னும்
 

7. முதல்நிலை

 

(101)

பன்னீ ருயிருங் கசதந பமவய
ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்.
      எ - ன், நிறுத்தமுறையானே மொழிக்கு முதலாமெழுத்தாவன
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இச்சொல்லப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் பொதுவகையால்
மொழிக்குமுதலாம் எ - று.