| 36 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வ - று. அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடை, ஏடு, ஐயம், ஒடு, ஓடு, ஒளவியம் எனவும்; களி; காளி, 1கிரி, கீரி, குளி, கூளி, கெடல், கேடு, 2கைதை, கொவ்வை, கோவை, கௌவை எனவும்; சளி, சாரல், சிலை, சீலை, 3சுளை, சூளை, செறி, 4சேறி, சையம், 5சொரி, சோரி, சௌரி எனவும்; தரை, தாரை, திரை, தீரை, துரை, தூரை, தெரி, தேரை, தையல், தொய்யில், 7தோயல் தௌவை எனவும்; நரை, நாரை, நிரை, நீர்மை, நுரை, நூறு, நெரி, நேர்மை, நைவு, 8நொவ்வு, நோவு, நௌவி எனவும்; படை, பாடி, பிடி, பீடு, புடை, பூடு, பெடை, பேடு, பைதல், 9பொய்தல், போதல், பௌவம் எனவும்; மலை, மாலை, 10மிசை, மீசை, முளை, மூளை, மெருள், மேடு, மையல், மொழி, மோழை, மௌவல் எனவும் வரும். இவை முழுதும் முதலாயின. ஒழிந்தவை தத்தம் சிறப்புவிதியிற் காட்டுதும். 11வரிமுறையான்வையாது இதனுள் மயங்கவைத்ததுவழக்குப் பன்மைபற்றியென்க. ஙகரம் மொழிக்கு முதலாமோவெனின், 12 “கசதப ஙவ்வே யாதியு மிடையும், டற விடை ணனரழ லளஇடை கடையே, ஞநமய வவ்வே மூன்றிடமென்ப” என ஙகரம் ஈரிடத்தும் நிற்கு மென்றார், ஆசிரியர் அவிநயனாரு மெனக்கொள்க.
(பி - ம்.) 1கிளி 2கைவை 3சுளி 4சேரி 5சொறி 6தூறு 7தோரை 8நொய்து 9பொய்கை, போர்வை 10மிகை, மீகை 11வரிசை முறையான், வரன்முறையான் 11 (1) கசதப வாதி யிடையிட லிடையுள, வயநம ஙஞமூன் றிடமென மொழிப. (2) கசதப வாதி யிடையீ றவற்றுள, வயநம ஞஙமூன் றிடமென மொழிப. (3) கசதப வாதி யிடையுள டறவுள, வயநம ஞஙக்களு மூன்றிட மென்ப. (4) கசதப வாதி யிடையுண டவற்றுள, வயந மஙஞ மூன்றிடமென்ப. | | | (102) | உஊஒஓ வலவொடு வம்முதல். | எ - ன், பொதுவிதிமாற்றிச் சிறப்புவிதி உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ன்.) இந்நான்குமொழிந்த உயிரோடுங்கூடி வகரம் மொழிக்கு முதலாம் எ-று.
வ - று. வளி, வாளை, 1விளி, 2வீளை, வெளி, வேளை வைகல், வௌவுதல் எனவரும்.
(பி - ம்.) 1விழி, விளை. 2வீழி, வீணை. | (48) | | | (103) | அஆஉஊ ஓஒள யம்முதல். | இதுவுமது.
(இ - ள்.) இந்த ஆறுயிரோடுங்கூடி யகரம் மொழிக்குமுதலாம்எ - று.
வ - று. யவனர், யானை, யுகம், 1யூகம், 2யோகம், யௌவனம் என வரும். மேலில் ஒடுவை வருவித்துக்கொள்க.
(பி - ம்.) 1 யூகி 2 யோகி | (49) | | | (104) | அஆஎ ஒவ்வோ டாகு ஞம்முதல் | இதுவுமது. | |
|
|