1. - எழுத்தியல்

37

   
     (இ - ள்.) இந்நாலுயிரோடுங்கூடி ஞகரம் மொழிக்குமுதலாம்எ - று.

     (வ - று.) 1ஞமன், 2ஞாலம், 3ஞெகிழ்ந்தது, ஞொள்கிற்று என வரும்.

     (பி - ம்.) 1ஞமலி 2ஞானம் 3ஞொளிந்தது

(50)

 

(105)

1சுட்டியா வெகர வினாவழி யவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே.

     இதுவுமது.

     (இ - ள்.) மூன்றுசுட்டிற்கும் யாவும் எகரமுமாய வினாக்களுக்கும் வழியே
2அகரத்தோடுங்கூடி ஙகரம் மொழிக்குமுதலாம். எ - று.

     (வ - று.) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் எனவரும்.
உம்மை இறந்ததுதழீஇயஎச்சவும்மை. * “சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி, சளிசகடு சட்டை
சவளி - சவிசரடு, சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும், வந்தனவாற் சம்முதலும் வை.”
“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி, னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”
(மொழிமரபு, 34) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு
முதலாமென்றாராலோவெனின், “நுந்தையுகரங் குறுகி மொழிமுதற்கண், வந்த
தெனினுயிர்மெய் யாமனைத்தும் - சந்திக், குயிர்முதலா 3வந்தணையு மெய்ப்புணர்ச்சி
யின்றி, மயலணையு மென்றதனை மாற்று.” இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும்
அறிந்துகொள்க.

     மொழிமுதல் முற்றும்.

     (பி - ம்.) 1சுட்டுயா 2அகரத்தோடு ஙகரம் 3வந்தனைய

(51)

8. ஈற்றுநிலை

 

(106)

ஆவி ஞணநம னயரல வழளமெய்
சாயு முகர நாலாறு மீறே.
     எ - ன், நிறுத்தமுறையானே மொழிக்கு ஈற்றெழுத்தாவன உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இச்சொல்லப்பட்ட உயிரும் மெய்யும் குற்றுகரமுமாகிய
இருபத்துநாலெழுத்தும் மொழிக்கு ஈறாவனவாம் எ - று.

     வ - று. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனவும்; உரிஞ், மண், பொருந், மரம், பொன்,
வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் எனவும், 1அஃகு எனவும் வரும். இவை
பொதுவிதியாற் போந்தன. ஏனைய வருஞ்சூத்தி ரத்திற் பெறுதும். குற்றுகரமும்
உயிராயடங்குமெனினும் புணர்ச்சி முதலான வேறுபாடுண்மைநோக்கி
வேறெடுத்தோதினாரென்க.

     (பி - ம்.) 1எஃகு
 

(52)

 

(107)

குற்றுயி ரளபி னீறா மெகரம்
மெய்யொ டேலா தொந்நவ் வொடா1மௌ
ககர வகரமொ டாகு மென்ப.

     * இது, “சகரக் கிளவியு மவற்றோரற்றே” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை
மறுத்துரைப்பார்கூற்றுப்போலும்.