38

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     எ - ன், குற்றுயிர்க்குப் பொதுவிதிமாற்றிச் சிறப்புவிதியும், எல்லா வுயிர்க்கும்
பொதுவிதியின்மேற் சிறப்புவிதியும் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) குற்றுயிர் அளபின் ஈறாம் எ - து, குற்றுயிரைந்தும் தாமே நின்று
ஈறாகா, அளபெடுப்புழி ஈறாம் எ - று.வ - று. ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ
என வரும்.

     எகரம் மெய்யோடு ஏலாது எ - து, எகரம் மெய்களோடு கூடி நின்று ஈறாகாது எ-று.

     ஒ நவ்வொடு ஆம் எ - து, ஒகரம் நகரமொன்றுடனே கூடி நின்று ஈறாம் எ-று.

     வ - று. நொ எனவரும்.

     ஒள ககர வகரமொடு ஆகும் எ - து, ஒளகாரம் ககரத்தோடும் வகரத்தோடுங்
கூடிநின்று ஈறாம் எ - று.

     வ - று. கௌ, வௌ எனவரும்.

     என்ப எ - து, என்றுசொல்லுவர் புலவர் எ - று.

     எனவே, உயிர்கள் தாமேநின்றும் அளபெடுப்புழி நின்றும் ஈறாதலேயன்றி, ஒகரம்
நகரத்துடனும், ஒளகாரம் ககர வகரங்களுடனும், எகர மொழிந்த ஏனைய ஒன்பதுயிரும்
தமக்கேற்ற மெய்களுடனும் கூடிநின்று ஈறாம் எ - று.

     எகர ஒகர ஒளகாரங்களை விதந்தோதினமையான், ஏனை உயிர்கள் தமக்கேற்ற
மெய்களோடு ஈறாமென்பது தாமேபோதருமெனக்கொள்க.

     வ - று. வாழ்க, 2மூங்கா, 3பெருங்கி, 4பெருங்கீ, 5பங்கு, 6கூ, எங்கே, எங்கை,
எங்கோ எனவரும். இவ்வாறே ஏற்கும் பிறமெய்களோடும் ஒட்டிக்கொள்க.
ஏற்குமென்பது எற்றாற்பெறுதுமோவெனின், சூத்திரத்து எடுத்தோதாது ஞாபகவகையாற்
சொற்றமையாற் பெறுதும்.

     (பி - ம்.) 1 ஒளக்ககர 2 பூங்கா 3 (1) பருங்கி (2) பிருங்கி,4 பெருகீ 5 பெருகு 6
(1) பெருகூ (2) பங்கூ.
 

(53)

     

(108)

நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே.

     எ - ன், உயிர்மெய் முதலும் ஈறுமாமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஒற்றுமுன்னும், உயிர் பின்னுமாய் நிற்றலின் உயிர்மெய்யானது
மெய்முதல் மொழியென்றும் உயிரீற்றுமொழியென்று மாவதன்றி உயிர்மெய்முதலென்றும்
உயிர்மெய் ஈறென்றும் வழங்கப்படாது எ - று.

     ஈறு முற்றும்.
 

(54)

9. இடைநிலை

     

(109)

கசதப வொழித்தவீ ரேழன் கூட்டம்
மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை
மேவு முயிர்மெய் மயக்கள வின்றே.