1. - எழுத்தியல்

39

   
     எ - ன், நிறுத்தமுறையானே இடைநிலையாமாறு உணர்த்துவா
னெடுத்துக்கொண்டார், அவற்றுள் இச்சூத்திரம், பொதுவகையால்1மெய்ம்மயக்கமும்
உடனிலைமயக்கமும் ஆமாறும் 2அவற்றதெண்ணும் அவைநிற்குமிடமும் ஆமாறும்
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மெய் பதினெட்டுள்ளும் கசதபவென்னும் நான்கும் ஒழித்துநின்ற
பதினாலுமெய்யும் ஒன்றன்பினொன்று மாறிவந்து ஒன்றுவது மெய்ம்மயக்கமாம்; ரகர
ழகரமொழித்துநின்ற பதினாறு மெய்யும் தம்முன்னர்த் தாம்வந்தொன்றுவது
உடனிலைமயக்கமாம். இச்சொல்லப்பட்ட இருகூற்று முப்பதுமயக்கும்
மொழியிடையிலேயாம். உயிர்மெய்மயக்கம் இன்னதன்பின்னர் இன்னதாமென்னும்
வரையறையில்லை எ - று.

     (பி - ம்.) 1மெய்ந்நிலைமயக்கமும் 2அவற்றிற்கெண்ணும்

(55)

மெய்ம்மயக்கம்

 

(110)

ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.
     எ - ன், ஙகர வகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஙகரமுன்னர்க் ககரமும், வகரமுன்னர் யகரமும் வந்து மயங்கும் எ-று.

     வ - று. கங்கன், தெவ்யாது எனவரும்.

(56)

 

(111)

ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும்.
     எ - ன், ஞகர நகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டுமெய்ம்முன்னரும் தமக்கினமாகிய சகரதகரங்களும் யகரமும் வந்து மயங்கும் எ - று.
     வ - று. கஞ்சன், உரிஞ்யாது, கந்தன், வெரிந்யாது எனவரும்.

(57)

 

(112)

டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்.
     எ - ன், டகர றகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டுமெய்ம்முன்னரும் கசபவென்னுமூன்று மெய்யும் மயங்கும்
எ-று.

     வ - று. கட்கம், 1கட்சி, கட்ப எனவும், கற்க, 2கற்சிறை, கற்ப எனவும் வரும்.

     (பி - ம்.) 1கட்சிறார் 2கற்சிறார்
 

(58)

 

(113)

ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும்.
     எ - ன், ணகர னகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டின்முன்னர்த் தமக்கினமாகிய டறக்களும் க ச ஞ ப ம ய வ
என்னும் ஏழுமெய்யும் மயங்கும் எ - று.

     வ - று. 1வெண்டயிர், 2வெண்கலம், வெண்சோறு, வெண்ஞாண், வெண்பல்,
வெண்மலர், மண்யாது, மண்வலிது எனவும், புன்றலை, புன்கண், புன்செய், புன்ஞான்,
புன்பயிர், புன்மலர், பொன்யாது, பொன்வலிது எனவும் வரும்.

     (பி - ம்.) 1விண்டு 2வெண்கல்

(59)