(இ - ள்.) இப்பெற்றியான்வருவது சார்புநூலாவது எ - று. இம்மூன்றனுள் ஒன்றாய்வருவது நூலென்றறிக. தொல்லாசிரியர் சூத்திரங்களை ஈண்டுவைத்துப் பயந்தது என்னையோவெனின், உண்டு பயந்தது; யாது? |
| | * “முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் - முன்னோரின் வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்கும் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்” |
என்பதனாற்கொள்க.என்பதனாற்கொள்க. |
(8) |
நாற்பொருட்பயன் |
| (9) | ( அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே. |
(இ - ள்.) இந்நாற்பொருளையும்பெறுதல் நூற்குப்பயனாவது எ-று. |
(9) |
எழுமதம் |
| (10) | ( எழுவகை மதமே 1யுடம்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே |
| 5 | பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. |
|
(இ - ள்.) இவ்வெழுமதமும்படவருதல் நூற்கு இயல்பு எ - று (பி - ம்.) 1யுடன்படல் |
(10) |
பத்துக்குற்றம் |
| (11) | குன்றக் கூறன் மிகைபடக் கூறல் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல் |
* இம்மேற்கோளைப் பிற்காலத்தார் தனிச்சூத்திரமாக வழங்கினர். ( இதுமுதலிய ஐந்துசூத்திரங்களிலுள்ள சொற்றொடர்களை எடுத்துக் காட்டி, இவ்வாறுசொன்னார் பாடலனாரென்னுமாசிரியரென்பர் குணசாகரர் (காரிகை, ஒழிபு அ, உரை.) ( இச்சூத்திரமுதலியமூன்று, யாப்பருங்கலம், முதற்சூத்திரவுரை முதலியவற்றிலுமுள்ளன. |