38

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     

(114)

மம்முன் பயவ மயங்கு மென்ப.
     எ - ன், மகரமெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மகரமெய்ம்முன்னர்ப் பகர யகர வகரங்கள் வந்து மயங்கும் எ - று.

     வ - று. கம்பன், 1கலம்யாது, 2கலம்வலிது எனவரும்.

     (பி - ம்.) 1காலம் யாது 2காலம் வலிது

(60)

     

(115)

யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்.
     எ - ன், யகர ரகர ழகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இம்மூன்றன்முன்னரும் மொழிமுதலான பத்தினுள்ளும் 1ஙகரமொழித்து
ஒழிந்த ஒன்பதுமெய்யும் மயங்கும் எ - று.ஙகரம் ஈண்டு விலக்கிற்றில்லையாலோ
வெனின், அது, 2தன் விதிச்சூத்திரத்தினுள்ளே இன்னவிடத்துவருமென்று இடங்குறித்துச்
சொன்னமையாற் 3பிறவழிவாராதெனக் கொள்க.

     வ - று. (வேய், வேர், வீழ்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது,
மாண்டது, யாது, வலிது) எனவரும்.

     (பி - ம்.) 1ஙகாரமொழிந்த ஒன்பதுமெய்யும் 2 (1) அதன் தனி
விதிச்சூத்திரத்தினுள்ளே (2) விதிச்சூத்திரத்தினுள்ளே 3 பிறவுழி
 
     

(116)

லளமுன் கசப வயவொன் றும்மே
 
     எ - ன், லகர ளகர மெய்ம்மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்விரண்டு மெய்ம்முன்னரும் க ச ப வ ய வென்னும் ஐந்துமெய்யும்
மயங்கும் எ - று.

     வ - று. (வேல், வாள்) + (கடிது, சிறிது, பெரிது, வலிது, யாது) எனவரும்.

     மெய்ம்மயக்கம் முற்றும்.

(62)

உடனிலை மயக்கம்

     

(117)

ரழவல் லனதம்முற் றாமுட னிலையும்.

     எ - ன், உடனிலைமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ரகரழகரமொழித்து ஒழிந்த பதினாறுமெய்யும் தம்முன் னர்த் தாம்வந்து
1மயங்கும். எ - று.

     வ - று. அருக்கன், அங்ஙனம், அச்சு, மஞ்ஞை, மட்டை, மண்ணை, வித்து,
வெந்நெய், அப்பி, அம்மி, அய்யர், அல்லி, அவ்வை, கள்ளி, கற்றை, கன்னி எனவரும்.

     (பி - ம்.) 1மயங்குவது உடனிலைமயக்கமாம்.
 

(63)

     

(118)

யரழவொற் றின்முன் கசதப ஙஞநம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா.

     எ - ன், ஈரொற்றுடனிலையாமாறும் 1தனிக்குறிற்கீழ் ஒற்றாகாதனவும்
உணர்த்துதல் நுதலிற்று.