1. - எழுத்தியல்

41

   
     (இ - ள்.) யரழவென்னும் மூன்றுமெய்ம்முன்னும் கசதபஙஞநம வென்னும்
இவ்வெட்டொற்றும் வந்து ஈரொற்றுடனிலையாய் நிற்கும். எவ்விடத்தும்
தனிக்குறின்முன்னர் ரகரழகரங்கள்வந்து ஒற்றாய் நில்லா எ - று.

     வ - று. வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை; சிறை, தலை, புறம் எனவும்,
வேய்ங்குறை, வேர்ங்குறை, வீழ்ங்குறை; சிறை, தலை, புறம் எனவும் கசதப ஙஞநமக்கள்
ஈரொற்றாய் வந்தவாறு காண்க. ஆகாதனவற்றிற்கு யாண்டும் காட்டாவன இல்லையெனக்
கொள்க.

     (பி - ம்.) 1ரகார ழகாரங்கள் தனிக்குறிற்கீழ் ஒற்றாகாதெனவும்

(64)

 

(119)

லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே.

     எ - ன், செய்யுட்குரிய ஈரொற்றுடனிலைமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) லகரளகரங்கள் திரிந்த னகரணகரங்கண்முன் மகரம் கால்மாத்திரையாய்
ஈரொற்றாய் நிற்கும், செய்யுட்கண் எ - று.

     வ - று. “சிதையுங் கலத்தைப் பயினாற் 1றிருத்தித், திசையறி 2நீகானும் போன்ம்”
(பரி. 10), “வெயிலியல் வெஞ்சுர மையநீ யேகின், மயிலியன் மாதர் மருண்ம்” எனவரும்.

     (பி - ம்.) 1திருத்துந் 2மீகானும்

(65)

 

(120)

தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறியு மியலு மென்ப.

     எ - ன், முதனிலை இடைநிலைகட்கு உரியதோர் வழுவமைப்பு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) எழுத்துக்கள் தம்பெயர்களை மொழியுமிடத்து ஈண்டுச்
சொன்னமுறையன்றி முதலாகாதன முதலாகியும் மயங்காதன மங்கியும் வரப்பெறும் எ-று.

     வ - று. “அவற்றுள், லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்” (தொல். நூன்மரபு,
24) என்பதனுள், ளகரமெய்ம்முன்னர் லகரம் மயங்கினவாறும், லகரம் மொழிக்கு
முதலானவாறுங் காண்க.

(66)

 

(121)

மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே.
     எ - ன், இதுவும் ஓர் மயக்கவகையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மகரவீறான அஃறிணைப்பெயர்களுட்சில னகரத்தோடு உறழ்ந்துவருவன
உள எ - று.

     வ - று. நிலம், நிலன்; புலம் புலன்; கலம், கலன்; வலம், வலன்; முகம், முகன்;
அகம், அகன் என்றற்றொடக்கத்தன உறழ்ந்தன; ‘உறழா நடப்பனவுள’ எனவே,
உறழாதன பெரும்பான்மையவாமெனக் கொள்க. அவை: வட்டம், பட்டம், குட்டம்,
மாடம், கூடம், கடாம், படாம், கடகம், 1சடகம், நுகம், மகம், ஆரம், பூரம், உத்தரம்,
2வீக்கம், நோக்கம், 3ஊக்கம்்