42 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | என்றற்றொடக்கத்தன. இனி, இவ்விதி இவ்வாறன்றி, “மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த, னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப, புகரறக் கிளந்த வஃறிணைமேன” (தொல். மொழிமரபு, 49) என்று எகின், செகின், எயின், வயின், குயின், 4அழன், புழன், 5புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், 6பலியன், 7வலியன், வயான், 8கயான், அலவன், 9கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயினவும் மயங்கப்பெறாவென மறுக்க.
(பி - ம்.) 1 சகடம் 2 விசாகம் 3 ஓக்கம் 4 அழான், புழான் 5 வயான் 6 பயின் 7 (1) வயின், (2) வலியான் 8 கழான் 9 இகலன் | (67) | | (122) | அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். | இதுவுமது.
(இ - ள்.) மொழிக்குமுதலினும் இடையினுநின்ற அகர ஐகாரங்கள் தம்மில் வேறுபாடின்றி ஒக்கும், சகர ஞகர யகரங்கள் முன்வரின் எ - று.
ஈண்டுமுன்னென்றது காலமுன் எனக்கொள்க.
வ - று. பசல், பைசல்; மஞ்சு, மைஞ்சு; 1மயல், மையல்; எனவும், அரசு, அரைசு; முரஞ்சு, முரைஞ்சு; அரயர், அரையர் எனவும் வரும்.
(பி - ம்.) 1அயர், ஐயர் | | (123) | ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்மரு முளரே. | இதுவுமது.
(இ - ள்.) ஐகாரமே யகரமேயென்றிவற்றின் வழியேவரும் நகரத்துடன் ஞகரம் சிலவிடங்களில் உறழ்ந்துவரப்பெறு மென்பாரும் உளர் எ - று.
உம்மையான் உறழாதென்பாரும் பெரும்பாலாரெனக் கொள்க.
வ - று. ஐஞ்ஞூறு, மைஞ்ஞீலம், பைஞ்ஞன்று, கைஞ்ஞீட்சி எனவும், செய்ஞ்ஞன்றி, மெய்ஞ்ஞன்று, பொய்ஞ்ஞின்றான், 1செய்ஞ்ஞீண்டது, காய்ஞீண்டது எனவும்வரும். உறழ்ச்சியான், ஐந்நூறு, மைந்நீலம், செய்ந்நன்றி, மெய்ந் நன்று என்றற்றொடக்கத்தனவும் கொள்க.
இடைநிலைமுற்றும்.
(பி - ம்.) 1செய்ஞ்ஞான்றது | (69) | 10. போலி | | (124) | * அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. |
* ‘ அம்மு னிகர மாய்த மென்றிவை, எய்தின் ’ என மூலமும்,‘ அகர முன் இகரமும் ஆய்தமும் வரின் ’ என உரையும், ‘ அ இ வனம் ஐவனம்; கஃசு கைசு ’ என உதாரணம் மிதிலைப்பட்டி ஸ்ரீ அழகிய சிற்றம்பலக் கவிராயரவர்கள் வீட்டுப் பிரதியிலும் வேறு மூன்று பழைய பிரதிகளிலும் காணப்பட்டன. | |
|
|