எ - ன், நிறுத்தமுறையானே போலியெழுத்தாமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) அகரமுன் இகரமும் யகரமும் வரின் ஐகாரஓசைபோல இசைக்கும்; அகரத்தின்முன் உகரமும் வகரமும்வரின் ஒளகாரஓசைபோல இசைக்கும் எ -று.
போலவிசைக்குமெனவே அவை ஆகா; போலியாமெனக் கொள்க.
வ - று. அஇவனம், அய்வனம் - ஐவனம்; மஉவல், மவ்வல் - மௌவல் எனவரும். | (70) | எழுத்தின் சாரியை | | (125) | மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும் 1ஐஒள கானு மிருமைக் குறிலிவ் விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. | எ - ன், அதிகரித்தமுறையானே எழுத்தின்பகுதியான எண் முதற் பத்துமுணர்த்தி அவ்வெழுத்து வழங்குதற்குவரும் சாரியை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மெய்பதினெட்டும் அகரத்தையும், நெட்டுயிரேழும் காரத்தையும், ஐகாரஒளகாரங்கள் காரத்துடனேகானையும், உயிரும் உயிர்மெய்யுமான குற்றெழுத்தைந்தும் காரம் கான்களுடனே கரமென்பதையும் சாரியையாகச் சார்ந்துநடக்கும் எ - று. வ - று. க ங ச ஞ..........ற ன; ஆகாரம் ஈகாரம் ஊகாரம் ஏகாரம் ஐகாரம் ஓகாரம் ஒளகாரம்; ஐகான் ஒளகான்; அகாரம் இகாரம் உகாரம் எகாரம் ஒகாரம் ககாரம் ஙகாரம்.....றகாரம் னகாரம், அஃகான், னஃகான்; அகரம் இகரம் உகரம் எகரம் ஒகரம் ககரம்....னகரம் எனவரும். ‘பிற’ என்றமிகையானே கான்வருங்காலை ஆய்தமும், 2ஆன ஏன முதலானவுங் கொள்க. (பி - ம்.) 1ஐ ஒளக்கானும் 2(1) ஆனும் ஏனும் ஓனும் அம்முதலானவும் (2) ஆனும் ஏனும் அம்முதலானவும் (3) ஆனும் ஏனுவும் ஆனமுதலானவும் | (71) | புறநடை | | (126) | மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே. | எ - ன், எனைவகையெழுத்திற்கும் இயைவதோரிலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எழுத்துக்கள் பலவற்றையுங்கூட்டி நெருக்கி ஒரு தொடர் படக்கூறுமிடத்தும் தத்தம்வடிவும் அளவும் முதலாயின இயற்பிற்றிரியா; தனித்து நின்றாற்போலும், யாண்டும் எ - று. வ - று. மறு 1மற்று; மறை 2மற்றை எனவும், “கற்க கசடறக் கற்பவை கற்றபி, னிற்க வதற்குத் தக” (குறள் 391) எனவும் வரும். இவற்றுள் அவ்வாறாதல் காண்க. (பி - ம்.) 1மன்று 2மாறை | (72) | முதலாவது எழுத்தியல் முற்றிற்று. | | | | |
|
|