பொழுதுகொள்வினை’ எனவே, இவைதாமன்றி இவை காரணமாகப் பிறவற்றிற்காம் பெயர்வினைகளே பகுபதமாவனவெனக்கொள்க. பொருளாதி 1ஏழினையுந்தொடர்ந்து ஒன்றாய் நின்றமொழியைப் பகுதி விகுதி இடைநிலையெனப் பிரித்துக் காரணங்காட்டி மீட்டுங்கூட்டி ஒரு மொழியாகவே ஆக்கிக்கோடலிற் பகுபதமெனக் காரணப்பெயராமென்க; உதாரணம் மேற்காட்டுதும். பெயர்ப்பகுபதத்தோடும் ஆகுபெயர்ப்பதத்தோடும் தொகைப்பதத்தோடும் 2வினைப்பெயரோடும் முற்றுவினைப்பதத்தோடும் வேற்றுமையாதோவெனின், பெயர்ப் பகுபதம், பிரித்தால், பகுதி பகாப்பதமும் விகுதி வேறுபொருளில் இடைச் சொல்லுமாய்த் தொடர்ந்துநின்று பொருளை விளக்கும்;அவை:- ஊரன், வெற்பன், வில்லி, வாளியென்றற்றொடக்கத்தன. ஆகுபெயர்ப்பதமும் காரணத்தினான் ஆமேயெனினும் விகுதியின்றிப் பகுதியான பகாப்பதந் தானே பிறிதும் ஒருபொருளை விளக்கும். அவை: தெங்கு, கடு, புளி, குழிப்பாடி, சீனம், ஏறு, குத்து, நாழி என்றற்றொடக்கத்தன. தொகைப்பதம் இரண்டும் பலவும் பகாப்பதமும் பகுபதமும் நிலைமொழி வருமொழியாய்த் தொடர்ந்து இரண்டுமுதலாய பொருள் தோன்றநிற்கும்; அவை: யானைக்கோடு, கொல்யானை, கருங்குதிரை என்றற்றொடக்கத்தன. ஒரு தொழிற்சொல் எட்டுவேற்றுமையுருபுமேற்கின் 3வினைப்பெயராம்; அன்றித் தன்னெச்சமான பெயர்கொண்டுமுடியின் முற்றுவினைச் சொல்லாம். உதாரணம் உண்டான் என்பது; உண்டானை உண்டானொடு எனவும், உண்டான்சாத்தான் உண்டான்தேவனெனவும் வரும். அன்றியும் எடுத்த லோசையாற்சொல்ல வினைப்பெயராம்; படுத்தலோசையாற் சொல்ல முற்றுவினைப்பதமாமெனக்கொள்க.
(பி - ம்.) 1ஆறனையும் 2பொழுதுகொள்வினைப் பெயர் 3தொழிற்பெயர் | (5) | | (132) | பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். | எ - ன், பகுபதமுடித்தற்கு ஒருகருவியுணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) முதல்நிற்பதுவும் இறுதிநிற்பதுவும் இடைநிற்பதுவும் பொதுச்சாரியையும் சந்திவகையும் விகாரக்கூறு மாகிய ஆறினும் ஈண்டைக்கு ஏற்பன இவையெனக்கருதி வருவித்துமுடிக்கப் பொருளாதி எல்லாப்பெயர்ப்பகுபதமும் எல்லா வினைப்பகுபதமும் முடியும் எ - று. இவற்றுள் இடைநிலையாவன:- பெரும்பாலும் இனைய இத்துணைய வென்று அளத்தற்கரியவாய்ப் பதமுடிப்புழிக் காலமும் பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவன. சாரியையாவன:-அன் ஆன்முதலாக 1எடுத்தோதப்பட்டு எல்லாப்புணர்ச்சிக்கும் பொதுவாய்ப் பெரும்பாலும் இன்னொலியே பயனாகவருவன. சந்தியாவன :-இன்னதுவந்தால் இன்னது இன்னதாமென வருவன. விகாரமாவன :- பதத்துள் அடிப்பாடும் | | | | |
|
|