48

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
செய்யுட்டொடையும் ஒலியும் காரணமாக வலித்தல் மெலித்தல் முதலாயினவாக வருவன.
இவை இடைநிலை முதலானவற்றால் முடியாதவழி வருவனவெனக் கொள்க. ‘ஏற்பவை’
எனவே ஒன்றற்கே இவையாறும் வரவேண்டுமென்னும் யாப்புறவு இல்லையெனக்கொள்க.

     (பி - ம்.) 1எடுத்தோதவும்பட்டு

(6)

     

(133)

தத்தம், 1பாகஅப் பதங்களே 2குதி யாகும்.

     எ - ன், பகுபதங்கட்குப் பகுதியாவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பொருளாதியாறனையும்பற்றிவரும் பெயர்ப்பகுபதங்கட்கு
அப்பொருளாதியான பகாப்பதங்களே பகுதியாம் எ -று.

     வ - று. குழையன், குழையள், குழையர், குழையது, குழையன, குழையேன்,
குழையேம், குழையாய், குழையீர் என இவ்வாறுவருவன
இப்பொருளினையுடையாரென்னும் பொருண்மைப் பொருட்பெயர்ப்பகு பதம். வானான்,
வானாள், வானார், வானது, வானன, வானேன், வானேம், வானாய், வானீர் என
இவ்வாறு வருவன இவ்விடத்தினையுடையாரென்னும் பொருண்மை இடப்பெயர்ப்பகுபதம்.
காரான், காராள், காரார், காரது, காரன, காரேன், காரேம், காராய், காரீர் என
இவ்வாறுவருவன இக்காலத்தையுடையாரென்னும் பொருண்மைக் காலப்பெயர்ப்பகுபதம்.
தாளான், தாளாள், தாளார், தாளது, தாளன, தாளேன், தாளேம், தாளாய், தாளீர் என
இவ்வாறுவருவன இவ்வுறுப்பினையுடையாரென்னும் பொருண்மைச்
சினைப்பெயர்ப்பகுபதம். செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன்,
செய்யேம், செய்யாய், செய்யீர் என இவ்வாறு வருவன இக்குணத்தை யுடையாரென்னும்
பொருண்மைக் குணப்பெயர்ப் பகுபதம். ஊணான், ஊணாள், ஊணார், ஊணது, ஊணன,
ஊணேன், ஊணேம், ஊணாய், ஊணீர் என இவ்வாறுவருவன
இத்தொழிலையுடையாரென்னும் பொருண்மைத் தொழிற்பெயர்ப்பகுபதம். 3பிறவும்
இவ்வாறே ஒட்டிக்கொள்க. இவற்றுள், தத்தம்பகாப்பதங்களே பகுதியானவாறும் அன்,
ஆன் முதலாயின விகுதியானவாறும் ஏற்ற சாரியை 4சந்திகளானவாறும் கண்டுகொள்க.

     (பி - ம்). 1பகாப்பதங்களே 2குதியாம் 3பிறவுமன்ன 4சந்தி விகாரங்கள்.
 
     

(134)

செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே.

     எ - ன், 1மேல், பெயர்ப்பகாப்பதம் ஆறுவகைப்படுமென்றவற்றுட்
பண்புப்பகாப்பதம் விளங்கித் தோன்றாமையான் அவற்றை எடுத்து விரித்துணர்த்துதல்
நுதலிற்று.