(இ - ள்.) இச்சொன்னபதினொன்றும் இவற்றிற்குமாறான வெண்மை கருமை பொன்மை பசுமைகளும், பெருமையும் 2அணிமையும் நன்மையும் தண்மையும் பழமையும் வன்மையும் கீழ்மையும் நொய்ம்மையும் இன்மையும், பருமையும், இவைபோல்வன பிறவும் பண்புப்பகாப்பதம் எ - று.
வ - று. செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன், செய்யேம், செய்யாய், செய்யீர் என இவ்வாறு வருவன இக்குணத்தாரென்னும் பொருண்மைப் பண்புப்பகுபதம். சிறுமை, சேய்மை, தீமை முதலாகவுள்ளனவற்றோடும் பிறவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
(பி - ம்.) 1மேற்பகாப்பதங்களே பகுதியாகுமென்றார், அவற்றுட் பெயர்ப்பகாப்பதம் ஆறுவகைப்படுமென்றவற்றுட்பண்பு 2(1) அண்மை யும், (2) அணுமையும் | | | (135) | ஈறு போத லிடையுகர மிய்யாதல் ஆதி நீட லடியகர மையாதல் தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக லினையவும் பண்பிற் கியல்பே. | எ - ன், அப்பண்புப்பதத்திற்குரிய சிலவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பண்புப்பதத்தின் இறுதிகெடுதலும், இடையினின்ற உகரம் இகரமாதலும், முதலினின்ற உயிர்கள் நீடலும், முதலினின்ற அகரம் ஐகாரமாதலும், இடையே தன்னொற்றுமிகுதலும், முன்பு நின்றமெய் திரிதலும், வருமொழிமுதலுக்கு இனவெழுத்துமிகுதலும், இவை போல்வன பிறவும் முறைமை எ - று. ஈற்றுச்செய்கையை முதலிற் கூறியவதனான், இக்கேடு ஒருதலை யென்பதூஉம், கெடுவழி, ஈற்றுயிர் கெடுதலும், ஈற்றுயிர்மெய் கெடுதலும், ஈற்றுயிர்மெய்யொடும் ஈற்றயலுயிர் கெடுதலும், இனவெழுத்து வருமொழிக்கண்ணதென்பதூஉம், இவ்விதியெல்லாம் ஒன்றற்கல்ல வென்பதூஉம் கொள்க. வ - று. கரியன், பெரியன், நெடியன், சிறியனென்பன ஈற்றுயிர் மெய்கெட்டும் இடைஉகரம் இகரமாகியும் வந்தன. கருங்குதிரை, செங்கோலென்பன ஈற்றுயிரும் ஈற்றுயிர்மெய்யும் முறையே கெட்டு ஒற்றுத் திரிந்தன. காரா, பேரா. பாசிழை (சீவக. 586), பாசடை (குறுந். 9) என்பன ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு ஆதிநீண்டன. பைங்கண், பைந்தார் என்பன ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு ஆதிநின்ற அகரம் ஐகாரமாய் ஒற்றுத்திரிந்தன. வெற்றிலை, 1சிற்றானை, குற்றடி, குற்றுயிர், நெட்டிலை, நெட்டெழுத்து என்பன ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிரும் கெட்டு இடையே தன்னொற்றுமிக்கன. சேதாம்பல் என்பது ஈற்றுயிர்மெய்கெட்டு முன்புளதாய்நின்ற மெய் திரிந்து ஆதி நீண்டது; சேங்கன்று (செம்மை + கன்று) என்பது வருமொழிக்கினமான மெல்லெழுத்து மிக்கது. கருங்குதிரை முதலாயின பகுபதமல்லவேனும் பண்பதிகாரப்பட்டமையாற் | | | | | | | |
|
|