பாயிரம்

5

   
 

5

சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்ற நூற்கே.
     (இ - ள்.) இப்பத்துக்குற்றமும் சாராமல்வருவது நூலாவது எ-று.

(11)

பத்துஅழகு

 

(12)

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
 

5

விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.
     (இ - ள்.) இப்பத்து 1மாட்சியும் வேண்டும்நூற்கு எ - று.
     (பி - ம்.) 1மாட்சிமையுடைத்தாதல் வேண்டும் நூல்

(12)

முப்பத்திரண்டு உத்தி

 

(13)

நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
 

5

சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்
இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தன் 1மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்க லெதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
 

10

விகற்பத்தின் முடித்தன் 2முடிந்தவை முடித்தல்
உரைத்து மென்ற 3லுரைத்தா மென்றல்
ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
 

15

எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
பிறநூன் முடிந்தது 4தானுடம் படுதல்
தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்
5ஒன்றின முடித்த றன்னின முடித்தல்

20

உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.