| 50 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | பதப்புணர்ச்சிக்கும் ஈண்டே சொன்னாரெனக்கொள்க. ‘இனையவும்’ என்றதனாற் பண்பிற்குவருமுடிபு பிறவுமுளவேல் அவையும் ஈண்டே கொள்க.
(பி - ம்.) 1சிற்றாடை | (9) | | | (136) | நடவா மடிசீ விடுகூ ஏவை 1நொப்போ வௌவுரி ஞுண்பொருந் திரும்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே2ளஃகென் இருபான் மூன்றா மீற்ற வாய | | | 5 | செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. | எ - ன், வினைப்பகாப்பதம் விளங்கித்தோன்றாமையின், அவற்றை எடுத்துணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இச்சொல்லப்பட்ட இருபத்து மூன்று ஈற்றவாய ஏவல் வாய்பாட்டான் வருவனவெல்லாம் செய்யென்னும் ஏவல்வினைப் பகாப்பதமாம் எ - று.
வ - று. நடந்தான், வந்தான், மடிந்தான், 3சீத்தான், விட்டான், கூவினான், ஏவினான், வைத்தான், நொந்தான், போயினான், வௌவினான், உரிஞினான், உண்டான், பொருநினான், திருமினான், தின்றான், தேய்த்தான், பார்த்தான், சென்றான், வவ்வினான், வாழ்ந்தான், கேட்டான், அஃகினான் எனவரும்.
குற்றுகரத்தை வேறுபிரித்தோதியவதனால், போக்கு, பாய்ச்சு, 4உருட்டு, நடத்து, எழுப்பு, தீற்று என்றற்றொடக்கத்து வாய்பாட்டால் வருவனவும் அல்லா ஈறுகளான்வரும் வாய்பாடுகளுள்ளனவும் செய்யெனேவலில் அடங்குமெனக்கொள்க.
நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர் எனவும்; நடக்கின்றான், நடக்கின்றாள், நடக்கின்றார், நடக்கின்றது, நடக்கின்றன, நடக்கின்றேன், நடக்கின்றேம், நடக்கின்றாய், நடக்கின்றீர் எனவும்; நடப்பான், நடப்பாள், நடப்பார், நடப்பது, நடப்பன, நடப்பேன், நடப்பேம், நடப்பாய், நடப்பீர் எனவும் இவ்வாறே எல்லாத் திணைபாலிடம் காலங்கள்தோறும் ஒட்டிக்கொள்க.
(பி - ம்.) 1நொ போ 2 (1) அஃகென் றெய்திய விருபான் மூன்றாமீற்றவும், (2) அஃகெ னிருபான் மூன்றா மீற்றவும் பிறவும், (3) அஃகெனிருபான் மூன்று மீற்றவாய 3சீய்த்தான் 4ஊட்டு | (10) | | | (137) | செய்யென் வினைவழி விப்பி தனிவரிற் செய்வியென் னேவ லிணையினீ ரேவல். | எ - ன், 1செய்வி செய்விப்பியென்னும் ஏவல்வினைப்பகாப்பதங்கள் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செய்யென்னும் ஏவல்வினையின் பின்பு வி பி என்னும் இரண்டினுள் ஒன்றுவரிற் செய்வியென்னும்பொருளைப் பெறும். 2இவையிரண்டும் | |
|
|