2. - பதவியல்

51

   
3ஒருங்குவரினும் ஒன்றே இணைந்துவரினும் ஏவன் மேலேவல் தோன்ற மூவராவானொரு
கருத்தனைக் காட்டும் எ - று.

     வ - று. நடப்பி, வருவி, மடிவி, 4சீப்பி, விடுவி, கூவுவி, ஏவுவி, வைவி,
நொவ்வுவி, போவுவி, வௌவுவி, உரிஞுவி, உண்பி, பொருநுவி, திருமுவி, தின்பி,
தேய்வி, தேய்ப்பி, பார்ப்பி, செல்வி, வவ்வுவி, வாழ்வி, கேட்பி, 5அஃகுவி எனச் செய்வி
யென்னும் ஏவல் வினைப்பகாப்பதம் வந்தவாறு. நடத்துவிப்பி, வருவிப்பி, மடிவிப்பி
எனவும், நடப்பிப்பி, கற்பிப்பி எனவும் இரண்டும் இணைந்தும் ஒன்றேயிணைந்தும்
செய்விப்பியென்னும் ஏவன்மேல் ஏவற்பகாப்பதம் வந்தவாறு. இவற்றாற் பகுபதம்
வருமாறு :-நடத்துவித்தான், நடத்துவித்தாள், நடத்துவித்தார் எனவும், நடப்பித்தான்,
நடப்பித்தாள், நடப்பித்தார் எனவும் வரும். இவ்வாறே எல்லாத்திணைபால் இடம்
காலங்கள்தோறு மொட்டிச் செய்வியென்னும் ஏவற்குப் பகுபதம் வந்தவாறு
கண்டுகொள்க. நடத்துவிப்பித்தான், நடத்துவிப்பித்தாள், நடத்துவிப்பித்தாரெனவும்,
நடப்பிப்பித்தான், நடப்பிப்பித்தாள், நடப்பிப்பித்தார்; கற்பிப்பித்தான், கற்பிப்பித்தாள், கற்பிப்பித்தார் எனவும் எல்லாத்திணைபாலிடங் காலங்கள்தோறுமொட்டிச்
செய்விப்பியென்னும் இருமடியேவற்குப் பகுபதம் வந்தவாறு காண்க. இவையெல்லாம்
ஏற்றபெற்றி கொள்க.

     (பி - ம்.) 1 செய்வி, செய்பி, செய்விப்பி 2இவ்விரண்டும் 3ஒருங்கு வரின் ஏவல்மேல் ஏவல்தோன்றி மூவராவார்க்கொருகருத்தனை 4சீய்ப்பி 5அஃகுபி

(11)

 

(138)

விளம்பிய பகுதிவே றாதலும் விதியே.

     எ - ன், பகுதிக்குரியதோர்1விதி யுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேற்சொன்ன எனைவகைப் பகுதிகளுள்ளும் சில பொருளான்
வேறுபட்டும் சில மிக்கும் சில திரிந்தும் சில ஈறுகெட்டும் நிற்கையும் குற்றமாகா எ - று.

     நட வா மடி சீ என்றற்றொடக்கத்து வினைப்பகாப்பதங்கள் முன்னிலைப்
பொருளவேனும் ஏனையிடங்களுக்கும் திரிந்தும் பொருளேற்கும்.

     வ - று. வா என்பகுதி, வந்தான் வருகின்றா னென்புழி மகரம் மிக்கும் திரிந்தும்
வரும். கொள்ளென்பகுதி, கொண்டான், கோடு, கோடும் என்புழி ளகாரம் ணகாரமாகியும்
கெட்டும் ஆதி நீண்டும் வந்தது. கொல், செல், வெல் என்னும் பகுதிகள் கொன்றான்,
சென்றான், வென்றான்; கோறு கோறும், சேறு சேறும், வேறு வேறும் என்புழி லகாரம்
னகாரமாகியும் கெட்டும் ஆதி நீண்டும் வந்தன. வலைச்சி, புலைச்சி, 2குயத்தி,
கணவாட்டி என்றற்றொடக்கத்துப் பெயர்ப்பகுபதங்களெல்லாம், வலைமை, புலைமை
முதலான பெயர்ப்பகாப்பதத்து ஈறுகெட்டு இ ஏற்று வந்தன. ஆசுவி, சன்னாலி, ஏனாதி,
சேமாறி, 3கைவாரி, திருவிலி, பரிவிலி, அறிவிலி, பொறியிலி, நாளோதி, நூலோதி
என்றற்றொடக்கத்தனவும் ஈறுகெட்டன. பிறவும் இதுவே நிலனாகப் பகுதிக்கு
வருவனவெல்லாம் வருவித்துக் கொள்க.

     (பி - ம்.) 1இலக்கணம் 2குசத்தி 3கைமாறி