52

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     

(139)

அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அன்
அம்ஆம் எம்ஏம் ஓமொ டும்மூர்
கடதற ஐஆய் இம்மின் இர்ஈர்
 

5

ஈயர் கயவு மென்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.
     எ - ன், பகுபதங்கட்கு விகுதியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இச்சொன்ன முப்பத்தேழும் இவைபோல்வன பிறவும்
வினைப்பகுபதத்தின்கண் விகுதியாம்; பெயர்ப்பகுபதத்தின் கண்ணும் சில விகுதியாம்
எ-று.

     வ - று. நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார்,
நடப்ப, நடமார், நடந்தன, நடவா, நடக்கு, உண்டு, குண்டுகட்டு, நடந்து, நடந்தது, வேறு,
கூயிற்று, நடந்தனென், நடந்தேன், நடப்பல், நடப்பன், நடப்பம், நடப்பாம், நடப்பெம்,
நடப்பேம், நடப்போம், நடக்கும், உண்டும், 1நடந்தும், 2சென்றும், நடந்தனை, நடந்தாய்,
நடத்தி, நடமின், நடந்தனிர், நடந்தீர், நிலீயர், நடக்க, வாழிய, நடவும் என வினைக்கண்
முப்பத்தேழும் 3வினைமுற்று விகுதியாயின. பிறவற்றொடும் இவ்வாறே ஏற்பிக்க. பிறவும்
என்றதனால், பெயரெச்சவினையெச்ச 4விகுதிகள் வாய்பாடுகளும் அறிந்து பகுதி
விகுதியாக்கி இடைநிலையும் வேண்டுழித்தந்து முடிக்க. நடந்தவன் நடந்தான் எனத்
தொழிற்பெயர்க்கும் இவ்வாறே ஏற்பனவறிந்து ஒட்டிக்கொள்க. வில்லன், வில்லான்,
வளையள், வளையாள், ஊரர், ஊரார், வில்லி, வாளி, உருவிலி, திருவிலி, பொறியிலி,
செவியிலி, அரசி, 5பார்ப்பனி, செட்டிச்சி, உழத்தி, கிழத்தி, கணவாட்டி, வண்ணாத்தி,
காதறை, செவியறை எனப் பெயர்க்கண் விகுதியாயின. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
இவற்றுள் ஒன்றே 6பலவினை பெயர்கட்குவருவனவும் கொள்க. ஈண்டுப் பதமுடித்தற்குப்
பகுதி விகுதி மாத்திரையே காட்டியது; 7திணைபாலிடம் காலங்கட்குரியவாமாறு
சொல்லதிகாரத்துட் பெயர்வினை யோத்துக்களுட் சொல்லுதும்.

     (பி - ம்.) 1நடத்தும் 2சேறும் 3மூன்றிடத்தும் வினைமுற்று4விகுதிகளான வாய்பாடுகளும்5பார்ப்பினி 6வினைப்பெயர்கட்கும் 7திணைபாலிடங்கட்கு

(13)

     

(140)

இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே.

     எ - ன், பெயர்ப்பகுபதங்கட்கு இடைநிலையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) முற்காலத்திற்கண்ட இலக்கியங்கட்கே இலக்கணம் 1இயம்பலின், ஈண்டு
முடிக்கலுறும் பதத்தின் பகுதியையும் விகுதியையும்