அறிந்து, வேறு பிரித்தால் இடையிலேநிற்பதுயாது, அதனை வினைப்பெயரல்லாத 2பெயர்க்கு இடைநிலையெனக் கொள்ளவேண்டும் எ - று.
வ - று. வானவன், மீனவன், வில்லவன், எல்லவன், பகலவன், கதிரவன், கரியவன், செய்யவன், வெய்யவன், குறியவன், நெடியவன், புதியவன், பழையவன், சிறியவன், பெரியவன் என்றற்றொடக்கத்தன, ‘அ’ என்னும் இடைநிலைபெற்றன. சேரமான், கட்டிமான் என்றற்றொடக்கத்தன மகர இடைநிலைபெற்றன. வலைச்சி, புலைச்சி என்றற்றொடக்கத்தன சகரஇடைநிலை பெற்றன. 3புலைத்தி, வண்ணாத்தி என்றற்றொடக்கத்தன தகரவிடைநிலைபெற்றன. வெள்ளாட்டி, மலையாட்டி முதலாயின டகரவிடைநிலைபெற்றன. கணக்கிச்சி, தச்சிச்சி முதலாயின இச்என்னும் இடைநிலை பெற்றன. பிறவும் இவ்வாறே 4அறிந்து கொள்க. சந்தி வகையானும் பொதுச்சாரியைவகையானும் முடியாவழி இவ்வாறுவருவன இடைநிலையெனக் கொள்க. வினைப்பெயர்க்கு வினைப்பதத்திற்குச் 5சொன்னவையே இடைநிலையெனக்கொள்க.
(பி - ம்.) 1காட்டலின் 2பெயர்கட்கு 3புலத்தி 4அறிந்துவருவிக்க 5சொன்னவையேகொள்க | (14) | | | (141) | தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. | எ - ன், இறந்தகாலங்காட்டும் வினைப்பகுபத இடைநிலையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தகர டகர றகரமெய்களும் இன்னும், ஐம்பால் மூவிடத்தும் இறந்தகாலங்காட்டும் வினைப்பகுபத இடைநிலைகளாம் எ -று. வ - று. நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர் எனவும்; விட்டான், விட்டாள், விட்டார், விட்டது, விட்டன, விட்டேன், விட்டேம், விட்டாய், விட்டீர், எனவும்; உற்றான், உற்றாள், உற்றார், உற்றது, உற்றன, உற்றேன், உற்றேம், உற்றாய், உற்றீர் எனவும்; உறங்கினான், உறங்கினாள், உறங்கினார், உறங்கிற்று, உறங்கின, உறங்கினேன், உறங்கினேம், உறங்கினாய், உறங்கினீர் எனவும் வரும். இன்னை ஈண்டும் எடுத்தோதினமையாற் சாரியைஇன்னென்னாது இடைநிலை இன்னெனவேகொள்க. நடந்ததென்புழி அகரம் சாரியை அகரம். | | | (142) | ஆநின்று கின்று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. | எ - ன், நிகழ்காலங்காட்டும் வினைப்பகுபத இடைநிலையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆகாரத்தோடு கூடிய நின்றென்பதுவும் கின்றென்பதுவும் கிறு என்பதுவும் மூவிடத்துவரும் ஐம்பாற்கண்ணும் நிகழ்காலங்காட்டும் வினையிடைநிலைகளாம் எ - று. | | | | | | | |
|
|