| 54 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வ - று. உண்ணாநின்றான், உண்ணாநின்றாள், உண்ணாநின்றார், உண்ணாநின்றது, உண்ணாநின்றன, உண்ணாநின்றேன், உண்ணாநின்றேம், உண்ணாநின்றாய், உண்ணாநின்றீர் எனவும்; உண்கின்றான், உண்கின்றாள், உண்கின்றார், உண்கின்றது, உண்கின்றன, உண்கின்றேன், உண்கின்றேம், உண்கின்றாய், உண்கின்றீர் எனவும்; உண்கிறான், உண்கிறாள், உண்கிறார், உண்கிறது, 1உண்கிறன, உண்கிறேன், உண்கிறேம், உண்கிறாய், உண்கிறீர் எனவும் வரும். ‘கிறு’ என்பது முற்றுகரம்; அதனை, ‘முற்றுமற்றொரோவழி’ என்பதனாற் கெடுக்க.
(பி - ம்.) 1உண்கிறவை | (16) | | | 143 | பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. | எ - ன், எதிர்காலமிசைக்கும் வினைப்பகுபதவிடைநிலையும் சில இடைநிலைகளேலாதனவுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பகரவகரங்களான இரண்டொற்றும், மூவிடத்துவரும் ஐம்பால்களிலும் எதிர்காலங்காட்டும் வினைப்பகுபத இடைநிலைகளாம். இம் முக்காலமுங்காட்டும் இடைநிலைகளைச் சில வினைமொழிகள் ஏலாவாம் எ - று.
வ - று. உண்பான், உண்பாள், உண்பார், உண்பது, உண்பன, உண்பேன், உண்பேம், உண்பாய், உண்பீர் எனவும்; உறங்குவான், உறங்குவாள், உறங்குவார், உறங்குவது, உறங்குவன, உறங்குவேன், உறங்குவேம், உறங்குவாய், உறங்குவீர் எனவும் வரும். | (17) | | | (144) | றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தம் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் வெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே. | எ - ன், மேல் வினைக்கட் காலங்காட்டுவன இடைநிலைகளென்றும் சிலவினைமொழிகள் அவ்விடைநிலைகளை ஏலாவென்றும் போதந்தார், அவ்வேலாதன இவையென்பதூஉம் அவற்றாற்பெறுங்காலமும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) றகரத்தொடுகூடிவந்த உகரவீறும் உம்மீறுமான வினைச் சொற்கள் கழிந்தகாலமும் வருங்காலமும், தகரத்தொடுகூடி நின்ற அவ் விரண்டீற்றுவினையும் இறந்தகாலமும் எதிர்காலமும், டகரத்தொடுகூடி நின்ற அவ்விரண்டீற்றுவினையும் இறந்தகாலமும், ககரத்தொடுகூடிய அவ்விரண்டீற்றுவினையும் எதிர்காலமும், மின்னீறும் ஏவற்பொருண்மையின் வரும் அனைத்தீறுகளும் வியங்கோட்பொருளவும் இகரவீறும் மாரீறுமான வினைகள் ஏதிர்காலமும், பகரவீற்றுவினை இறந்தகாலமும் எதிர்காலமும், | |
|
|