| 56 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | மார்பானென்னும் பகுபதம் முடியுமாறாவது :-இவ்வுறுப்பையுடையானென்னும் பொருண்மைதோன்ற, “தத்தம்........பகுதியாகும்” என்பதனானே மார்பென்னும் சினைப்பகுதியை முதலில்வைத்து, “அன் ஆன்” என்பதனால் ஆன்விகுதியைநிறுவி, “உயிர்வரி னுக்குறண் மெய்விட்டோடும்” என்பதனானே குற்றுகரத்தைக்கெடுத்து, “உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே” என்பதனானே உயிரேற்றி மார்பானென முடிக்க. மார்பது என்பதற்குத் துவ்வென்னும் விகுதியையும் அகரச்சாரியையும்தந்து உகரங்கெடுத்து உயிரேற்றிமுடிக்க. மார்பாள், மார்பாரென ஏனைப்பாடலிடங்களினும் ஒட்டிக்கொள்க.
கரியனென்னும் பகுபதம் முடியுமாறாவது :-இந்நிறத்தையுடையானென்னும் பொருண்மைதோன்ற, “செம்மை சிறுமை” என்னும் சூத்திரத்தாற் கருமையென்னும் பண்புப்பகுதியை முதலில்வைத்து, “அன்னான்” என்பதனானே அன்னென்னும் விகுதியை நிறுவி, “ஈறுபோத லிடையுகரமிய்யாதல்” என்பதனாற் பகுதியது ஈற்றுயிர் மெய்யைக்கெடுத்து உகரத்தை இகரமாக்கி உடம்படுமெய்யை வருவித்து உடன்மேலுயிரேற்றி முடிக்க. கரியது என்பதற்கு, துவ்விகுதியும் அகரச்சாரியையும் யகரவுடம்படுமெய் யும்கொடுத்து முடிக்க. கரியள், கரியர், கரியன, கரியேன், கரியேம், கரியாய், கரியீர் என ஏனைப்பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க.
ஊணன்என்னும் பகுபதம் முடியுமாறாவது :-இத்தொழிலையுடையா னென்னும் பொருண்மை தோன்ற, “தத்தம்...........பகுதியாகும்” என்பதனானே, ஊணென்னும் தொழிற்பகுதியை முன்வைத்து, அதன்மீதே “அன்னான்” என்பதனானே அன்னென்னும் விகுதியைநிறுவி, “உடன்மேல் .........இயல்பே” என்பதனால், உடன்மேலுயிரேற்றி முடிக்க. ஊணது என்பதற்கு, துவ்விகுதியையும் அகரச்சாரியையும் தந்துமுடிக்க. ஊணள், ஊணர், ஊண என ஏனைப்பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க.
நடந்தானென்னும் பொழுதுகொள் வினைப்பகுபதம் முடியுமாறாவது :- “நடவா மடிசீ விடுகூ” என்பதனானே நடவென்னும்பகுதியை முன்வைத்து, அதன்மீதே, “அன்னானள்ளாள்” என்பதனானே ஆனென்னும் விகுதியை நிறுவி, “தடறவொற்றின்னே” என்பதனானே இடையே தகர இடை நிலையைவருவித்து, “இயல்பினும் விதியினும்” என்பதனானே தகரத்தை மிகுத்து, “வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்” என்பதனானே தகரத்தை நகரமாக்கி உடன்மேலுயிரேற்றி நடந்தானெனமுடிக்க. நடந்தது என்பதற்குத் துவ்விகுதியையும் அகரச்சாரியையுங் கொடுத்துத் தகரவொற்றை வருவித்துத் தகரத்தைமிகுத்துத் தகரவொற்றை நகரமாக மெலித்து முடிக்க. நடந்தாள், நடந்தார் என ஏனைப்பாலிடங்களிலும் ஒட்டிக் கொள்க.
நடத்தினானென்பதற்கு, “விளம்பிய பகுதிவே றாதலும் விதியே” என்பதனானே, நடத்து என்னும் பகுதியையாக்கி ஆன் விகுதியை நிறுவி | |
|
|