இன்என்னும் இடைநிலைகொடுத்து உகரங்கெடுத்து உயிரேற்றிமுடிக்க. நடத்துவித்தானென்பதற்கு, “செய்யென் வினைவழிவிப்பி தனிவரின்” என்பதனானே நடத்துவி என்னும் பகுதியை ஆக்கி, ஆன்விகுதியை நிறுவித்தகரவிடைநிலையை வருவித்து, “இயல்பினும் விதியினும்” என்பதனானே தகரத்தை இரட்டித்து உயிரேற்றிமுடிக்க. வந்தானென்பதற்கு “நடவாமடி” என்பதனான், வா என் பகுதியை முதலில்வைத்து அதனை, “விளம்பிய.... விதியே” என்பதனான் வம்என்றாக்கி ஆன்விகுதியைநிறுவி, “தடறவொற்றின்னே” என்பதனானே தகரவிடை நிலையைவருவித்து, “மவ்வீ றொற்றழிந்துயிரீ றொப்பவும்” என்பதனானே மகரத்தை நகரமாக்கி வந்தானென முடிக்க. 6வருவித்தானென்பதற்கு, “விளம்பியபகுதி” என்பதனான், வாவென்பதை வரு என்றாக்கி, “செய்யென்வினைவழி” என்பதனானே வருவி என்பது பகுதியாக்கி, ஆன்விகுதியும் தகரவிடை நிலையும் தந்து, “இயல்பினும் விதியினும்......மிகும்” என்பதனானே தகரத்தை இரட்டித்து உயிரேற்றி முடிக்க.
இவ்வினைப்பதமே வினைப்பெயராம். அவை எடுத்தல் படுத்தலோசைகளால் அறிந்துகொள்க. பிறவும் இங்ஙனமுடிக்க.
இனி, அரசுத்தொழிலையுடையான் அரசன், வாணிகமுடையான் வாணிகன், 6உழவையுடையான் உழவன், 7வேளாண்மை செய்வான் வேளாளன், கணக்கால்முயன்றுண்பான் கணக்கன், குந்தத் தொழிலா லுண்பான் 8குந்தவன், வலையால்முயன்றுண்பான் வலையன், உவச்சத் தொழிலால் முயன்றுண்பான் உவச்சன், தச்சத்தொழிலால் முயன்றுண்பான் தச்சன், வண்ணாரத்தொழிலால் முயன்றுண்பான் வண்ணான், கணவாளத்தொழிலால் முயன்றுண்பான் கணவாளனென்று இவ்வாறே ஆண்பாற்பெயர்ப் பகுபதங்களெல்லாம் முடிக்க.
பெண்பாற்பெயர்ப் பகுபதம் முடிப்புழி, இன்னகுலத்தாளென்னும் பொருண்மைதோன்ற முடிக்க. அரசியென்னும் பகுபத முடியுமாறாவது:- “தத்தம்........பகுதியாகும்” என்பதனானே அரசு என்னும் பகுதியைத் தந்து, “அன்னான்” என்பதனானே இகரவிகுதியை நிறுவி, “உயிர்வரினுக்குறள்” என்பதனானே உகரத்தைக் கெடுத்துச் சகரவொற்றின்மேல் “உடன்மேலுயிர்வந்து” என்பதனானே இகரவுயிரையேற்றி முடிக்க.
பார்ப்பனியென்னும் பகுபதம் முடியுமாறாவது :- ‘தத்தம் பகாப்பதம்’ என்பதனானே பார்ப்பானென்னும் பகுதியை முதல்வைத்து, அதனை “விளம்பியபகுதி” என்பதனானே 9பார்ப்பனென அன்னீறாக்கி, “அன்னான்” என்பதனானே இகரவிகுதியைக் கொணர்ந்து உயிரேற்றி முடிக்க.
வாணிச்சியென்னும் பகுபதம் முடியுமாறாவது:- வாணிகன் என்னும் பகுதியை, “விளம்பியபகுதி” என்பதனானே கன்கெடுத்து நிறுவி இகர விகுதியைக் கொணர்ந்து, ச் என்னும் இடைநிலையை வருவித்து அதனை மிகுவித்து உயிரேற்றிமுடிக்க.
உழத்தியென்னும் பகுபதம் முடியுமாறாவது :-உழவன் என்னும் பகுதியை, “விளம்பிய பகுதி” என்பதனானே வன்கெடுத்துநிறுவி இகர | | | | | | | | |
|
|