58 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | விகுதி கொணர்ந்து, “இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின்” என்பதனானே தகரவிடைநிலையை வருவித்து அதனைமிகுத்து உயிரேற்றி முடிக்க. தச்சிச்சியென்னும் பகுபதம் முடியுமாறாவது :-தச்சன் என்னும் பகுதியை அன்கெடுத்துநிறுவி இகரவிகுதியைக் கொணர்ந்து, “இலக்கியங் கண்டதற்கு” என்பதனான் இச்சென்னுமிடைநிலையை வருவித்து உயிரேற்றி முடிக்க.
இவ்வாறே எல்லாப் பகுபதங்களையும் பகுதிமுதலான கருவிகள் தந்து ஏற்றவாறு முடிக்க.
(பி - ம்.) 1பொருள் 2உயிரேற்றி 3வருவித்துமுன்போல 4முற்போற் 5வருவித்தானென்பதனை 6உழவைமுயல்வான் 7வெள்ளாண்மை 8குந்தன் 9ஆன்கெடுத்து அன்நிறுவிப் பார்ப்பனென ஆக்கி | (18) | | (145) | இடையி னான்கு மீற்றி லிரண்டும் அல்லா வச்சை வருக்க முதலீறு யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும். | எ - ன், 1வடமொழிப்பதம் 2தமிழொடுவருங்கால் திரிவனவுந் திரியாதனவும் பொதுவகையான் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வடமொழியுள் அச்சென்றுவழங்கும் உயிர்பதினாறனுள்ளும் இடையினின்ற ஏழாமுயிர் முதனான்கும் ஈற்றினின்ற இரண்டுமான ஆறும் ஒழிந்துநின்ற அஆ இஈ உஊ ஏ ஐ ஓ ஒள என்னும் பத்தும், அல்லென்று வழங்குமெய் முப்பத்தேழனுள்ளும் கசடதப வென்னும் ஐந்தன்வருக்கத்துள் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டுநிற்கும் மூன்று மொழிந்த கங, சஞ, டண, தந, பம என்னும் பத்தும், யரலவ என்னும் நான்கும் ளவ்வுமான இருபத்தைந்தும் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாம்; இவையன்றி, மேல்உயிரிலொழிந்த ஆறும், ஐந்துவருக்கங்களிலும் இடைகளிலொழிந்த பதினைந்தும், முப்பதாமெய் முதலான எட்டனுள் ளகரமொழிந்த ஏழுமான இருபத்தெட்டும் வடமொழிக்கே உரியவாய்த் தமிழ்மொழிக்குவருங்கால் தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும் எ - று.
இருபத்தைந்தும் பொதுவெனவே மற்றுள்ளவை சிறப்பெழுத்தா மென்பது தானே போதருமெனக் கொள்க. இவ்வாறு பகுத்துரைத்தற்குப் பயன் :- பொதுவெழுத்துப்பதம் வருதலே 3சிறப்புடைத்து, அல்லனவருதல் சிறப்பன்றெனக் கொள்க. 4வடமொழி முடிபிலக்கணங்கூறாது திரிபு கூறியது என்னையோவெனின், தமிழுள் விரவிவருமாத்திரைக்குத் திரிபு கூறியதன்றி 5அவைதம் இலக்கணங் கூறின் அஃதொழிந்த திசைச்சொற்களுக்கும் இலக்கணங் கூறல்வேண்டும்; வேண்டவே, 6தமிழ்கூறுவான் புகுந்துவைத்து ஈண்டு அவற்றின் இலக்கணங்கூறின் மற்றொன்று | |
|
|