விரித்தலென்னும் நூற்குற்றமேயாம். ஆதலால், அவை வழங்குமாறறிதற்கு வேண்டும் திரிபேசொன்னா ரென்க.
(பி - ம்.) 1ஆரியமொழிப்பதம் 2தமிழில் 3சிறப்புடைய 4வடவிலக் கணங்கூறாது 5அதன் 6ஆதிக்கண்ணேதமிழ்கூறுவான் | (19) | | (146) | அவற்றுள், ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் | | 5 | மேலொன்று சடவு மிரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவீ றையு மீயீ 1றிகரமும். | எ - ன், மேற்பொதுவகையாற்சொன்ன திரிபுவிகாரத்தைப் பகுத் துணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மேற்சொன்ன சிறப்பெழுத்துக்களுள் ஏழாமுயிர் இகரமும் இருவுமாம்; ஐந்துவருக்கங்களுள்ளும் இடையில்நின்ற மூன்றும் அவ்வவ் வருக்கங்களின் முதலெழுத்தாம்; எட்டாமெய்யான சவ்வருக்கத்துள் எடுத்துச்சொல்லுமெய் ஒரோவிடத்து யகரமுமாம்; முப்பதாமெய் மொழி முதற்கட் சகரமும் இடைக்கண் யகரமுமாம்; முப்பத்தொன்றாமெய் மொழி முதற்கட் சவ்வும் இடைக்கண் டவ்வுமாம்; முப்பத்திரண்டாமெய் மொழி முதற்கட் சகரமும் இடைக்கண் தகரமுமாம்; முப்பத்துமூன்றாமெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கட் ககரமுமாம்; முப்பத்தைந்தாமெய்யான கூட்டெழுத்து இறுதிகெட்டு இரண்டு ககரமுமாம்; ஆகாரவீற்றுமொழியுட் சிலவற்றின் ஈற்றுஆகாரம் ஐகாரமாம்; ஈகாரவீற்றுமொழியுட் சிலவற்றின் ஈற்று ஈகாரம் இகரமாம் எ - று.
மேலென்றது, முப்பதின்மேலான ஒன்று இரண்டு மூன்று ஐந்து கோடற்கென்க.
வ - று. இடபம், விடபம், திட்டி எனவும்; இருடி, மிருகம், விருத்தி எனவும் ஏழாமுயிர் இகரமும் இருவுமாயிற்று. நகம், நாகம், மேகம்; *சலவாதி, விசயம், சருச்சரை; பீடம், பீடை, திடம்; தலம், தினம், தரை; பலம், பந்தம், பாரமென ஐந்துவருக்கத்திலும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லுமூன்றும் அவ்வம் முதலாயின. 2அயம், பங்கயமென எட்டாமெய் யகரமுமாயிற்று. சாலை, சூலை எனவும், மயானமெனவும் முப்பதாமெய் சகரமும் யகரமுமாயிற்று. 3சட்டி, இடபம் என முப்பத்தொன்றாமெய் சகரமும் டகரமு மாயிற்று. சித்தி, சூத்திரம், சேனை எனவும், சாதனம், வத்தராயன் (வத்ஸராஜன் - உதயணன்) எனவும் முப்பத்திரண்டாமெய் சகரமும் தகரமுமாயிற்று. அரன், அரி, ஆரம் |
*ஒரு கருத்துப்பற்றி ஒருவன் கூறியமொழிக்கு வேறுபொருள் கற்பித்துக்கொண்டு பழித்துக் கூறுபவன். | |
|
|